இந்திய திருமணங்கள் என்றாலே ஆடம்பரம், செலவு, விதவிதமான உணவுகள் மற்றும் பிரமாண்டமான கொண்டாட்டங்கள் என்றே நினைப்போம். பல குடும்பங்கள் திருமணத்தை சிறப்பாக நடத்த ஆண்டுகளாக சேமித்து, லட்சக்கணக்கில் செலவு செய்து திருமணம் நடத்துக்கின்றனர். ஆனால், உத்தரப் பிரதேச மாநிலம் காசிபூரை சேர்ந்த சித்தார்த் ராய், தனது சகோதரியின் திருமணத்தை முற்றிலும் வேறுபட்ட முறையில் நினைவுகூரத்தக்கதாக மாற்றினார்.