சத்தீஸ்கர் மாநிலத்தில் வசிக்கும் ஏழு வயது சிறுமி ராஜேஸ்வரி, இக்தியோசிஸ் எனப்படும் குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்பட்டு வருகிறார். இந்த நோயின் காரணமாக அவரது தோல் செதில்களாக மாறுகிறது. மேலும், அந்த சிறுமியின் உடல் முழுவதும் கொப்பளங்கள் மற்றும் வறண்ட தோலால் சூழப்பட்டிருக்கிறது. கை, ல், முதுகு உள்ளிட்ட பெரும்பாலான உடல் பகுதிகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.