இளநரை ஏற்படாமல் இருக்கணுமா? இந்த 5 விஷயங்களைத் தவிருங்கள்
Grey Hair: முன்பு முடி நரைக்கும் பிரச்னை வயதானவர்களுக்கு மட்டுமே இருந்தது. வயதானால் முடி நரைப்பது என்பது இயல்பு. ஆனால் சிலருக்கு இளம் வயதிலேயே முடி நரைக்கத் தொடங்குகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான 5 காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் பலரின் தலைமுடி இளம் வயதிலேயே நரைக்க தொடங்குகிறது. ஒரு காலத்தில், வயதானவர்களுக்கு மட்டுமே நரை முடி (Grey Hair) இருக்கும். ஆனால் தற்போதைய நிலைமை அப்படி இல்லை. இளைஞர்களிடையே இந்தப் பிரச்னை அதிகமாக உள்ளது. இப்போது வெளியே செல்பவர்களுக்கு இது சங்கடமாக இருக்கிறது. இதனால் இளம் வயதிலேயே ஹேர் டை பயன்படுத்துக்கு தள்ளப்படுகிறார்கள். மேலும் இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இளம் வயதிலேயே முடி நரைக்க என்ன காரணம் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சில வகையான உணவுகள் மற்றும் பானங்கள் இந்த வகையான பிரச்சனைக்கு காரணம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை என்னவென்று இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மது அருந்துதல்
இளம் வயதிலேயே இயற்கையாகவே கருப்பாக இருக்கும் முடி படிப்படியாக வெள்ளையாக மாறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மது அருந்துதல். அதிகமாக மது அருந்துவது, மது அருந்துபவர்களின் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் தலைமுடியை வெண்மையாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிக்க : வாரத்திற்கு 2 முறை ஆயில் மசாஜ் செய்யுங்கள்.. காணாமல் போகும் முடி உதிர்வு பிரச்சனை!




பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள்
அதிகப்படியான மது அருந்துவதோடு, பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளையும் அதிகமாக உட்கொள்வது இளம் வயதிலேயே முடி வெண்மையாக்க வழிவகுக்கும். அதாவது பதப்படுத்தப்பட்ட உணவுகள் நரைமுடிக்கு காரணமாக அமைகின்றன.
டீ மற்றும் காபி குடிப்பது
தினமும் டீ மற்றும் காபி குடிப்பது பொதுவானது. ஆனால் டீ மற்றும் காபி அதிகமாக குடிப்பவர்களின் முடி வெண்மையாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் அவற்றில் உள்ள காஃபின் உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. இதன் விளைவாக, முடி நரைக்கிறது.
இதையும் படிக்க: மழைக்காலத்தில் முகம் டல் அடிக்கிறதா..? பொலிவான சருமத்திற்கான டிப்ஸ் இதோ!
வறுத்த உணவுகள்
இப்போதெல்லாம், வறுத்த உணவுகளை உட்கொள்வது ஒரு பழக்கமாகிவிட்டது. ஆனால் உங்களுக்குத் தெரியுமா? நாம் விரும்பி சாப்பிடும் வறுத்த உணவுகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் இல்லை. அவற்றை அதிகமாக உட்கொள்வது நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். இது முடி வெண்மையாக மாற வழிவகுக்கும். எனவே இதுபோன்ற உணவுகளிலிருந்து முடிந்தவரை விலகி இருப்பது நல்லது.
உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்
அதேபோல், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, இது முடியின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அதிகமாக உட்கொண்டால், தலையில் உள்ள அனைத்து கருப்பு முடிகளும் வெண்மையாக மாறும் அபாயம் உள்ளது.