Health Tips: இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஒற்றைத் தலைவலி.. தடுக்க உதவும் 20-20-20 முறை..!
Migraine Headaches in Young Adults: இன்றைய இளைஞர்கள் பலர் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றனர். மன அழுத்தம், அதிக டிஜிட்டல் பயன்பாடு, தூக்கமின்மை, தவறான உணவுப் பழக்கங்கள் போன்றவை முக்கிய காரணங்கள். திரை நேரத்தைக் குறைத்தல், யோகா, தியானம், போதுமான தூக்கம், சீரான உணவு ஆகியவை ஒற்றை தலைவலியை தடுக்க உதவி செய்யும்.
 
                                இன்றைய காலக்கட்டத்தில் 25 வயதுக்கு மேற்பட்டோர் பலரும் ஒற்றை தலைவலியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், அடிக்கடி ஒற்றை தலைவலி (Migraine Headaches) பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இது வாழ்க்கை தரத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஸ்மார்ட்போன், எல்.இ.டி டிவி போன்ற சாதனங்களை அதிகம் பயன்படுத்துவதும், மன அழுத்தம் (Mental Pressure) போன்றவையும் ஒற்றை தலைவலியை உண்டாக்கலாம். இந்தநிலையில், இளைஞர்களிடையே ஒற்றை தலைவலிக்கான தூண்டுதல்கள், ஒற்றை தலைவலி ஏன் ஏற்படுகிறது..? இதை எவ்வாறு அகற்றுவது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
மன அழுத்தம்:
மன அழுத்தம் என்பது 70 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள், இன்றைய காலத்தில் ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கான முதன்மையான தூண்டுதலாகும். அதிகப்படியான பணிச்சுமை, நிதி பாதுகாப்பின்மை மற்றும் மன சலசலப்பு ஆகியவை கார்டிசோலின் அளவை உயர்த்தி, பதற்றம் மற்றும் தலைவலியை உருவாக்குகின்றன.
ALSO READ: உடலில் நீர் பற்றாக்குறையை எவ்வாறு கண்டறிவது? முக்கிய 7 அறிகுறிகள் இதுதான்!




டிஜிட்டல் திரிபு:
பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு நாளும் 7 முதல் 9 மணிநேரம் வரை திரைகளில் செலவிடுகிறார்கள். ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கு மேலாக செல்போனின் செல்வழித்த இளைஞர்கள், முக்கியமான 18 – 34 வயதுடையவர்கள், ஒற்றை தலைவலி ஏற்படும் அபாயத்தை 30 சதவீதத்திற்கு அதிகமானோர் எதிர்கொள்கின்றனர். செல்போன், எல்.இ.டி போன்ற சாதனங்களில் இருந்து வெளிப்படும் ப்ளூ ரே, திரைகளுடன் தொடர்புடைய சர்க்காடியன் நம்மை இடையூறு செய்து தலைவலியை உண்டாக்கும்.
ஆரோக்கியமற்ற தூக்க முறைகள்:
ஒழுங்கற்ற தூக்கம் ஒற்றை தலைவலி வருவதற்கான வாய்ப்பை இரட்டிப்பாக்குகிறது. இரவு பணிகள், செல்போனை அதிக நேரம் பார்ப்பது மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது ஆகியவை ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும்.
உணவுமுறை:
அதிக காஃபின் பொருட்களை உட்கொள்ளுதல், துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவையும் ஒற்றை தலைவலியை உண்டாக்கும். இளம் ஐடி ஊழியர்கள் இதுபோன்ற உணவுமுறைகளை எடுத்து கொள்வதாலே அடிக்கடி ஒற்றை தலைவலியை எதிர்கொள்கின்றனர்.
வாழ்க்கை தரம்:
ஒற்றை தலைவலியின் கால அளவு 4-72 மணிநேரம் அல்லது அதற்கு மேல் இருக்கலாம். இந்த நேரத்தை கடக்கும்போது வலியும் அதிகரிக்கலாம். இதனால் குமட்டல், ஃபோட்டோபோபியா இருக்கலாம். இதனால், கிடைக்கும் நேரங்களில் ஓய்வை மேற்கொள்வது முக்கியம்.
ALSO READ: தும்மலை அடக்கலாமா வேண்டாமா? இது ஆபத்தை தருமா..?
ஒற்றை தலைவலியை தடுக்க என்ன செய்யலாம்..?
- ஒற்றை தலைவலி வராமல் தடுக்க திரை நேரத்தை குறைத்தல், யோகா, தியானம், நீரேற்றம் மற்றும் வழக்கமான தூக்க சுழற்சிகளை மேற்கொள்ளலாம்.
- வலி மருந்துகளை தவிர, தடுப்பு மருந்துகள், வைட்டமின் பி2, மெக்னீசியம், ஆகியவை எடுத்து கொள்வதன்மூலம், ஒற்றை தலைவலி மீண்டும் வராமல் தடுக்கலாம்.
- நரம்பியல் நிபுணரை அணுகி இதற்கான சிகிச்சையை முறையாக பெற்றுகொள்ளலாம்.
20-20-20 குறிப்பை பின்பற்றலாம்:
- ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு முறை நீங்கள் செல்போன் அல்லது டிவியை பார்ப்பதில் இருந்து ஓய்வு கொடுக்கலாம். குறைந்தது 20 அடி தூரத்தில் இருந்து திரையை பார்ப்பதும், 20 நிமிடங்கள் மட்டுமே பார்ப்பதும் ஒற்றை தலைவலி வராமல் தடுக்கும்.
- தூக்கம், உணவுமுறை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்டவற்றை சரிவர பின்பற்றி நிர்வகித்தல் ஒற்றை தலைவலியை தடுக்கும்.
- காஃபி உட்கொள்ளலை ஒரு நாளைக்கு 2 கப் மட்டுமே எடுத்து கொள்ளலாம்.
 
                         
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                    