AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மழையை ரசிக்கலாம்… நோய்களை தவிர்க்கலாம்! மழைக்கால டிப்ஸ்

Prevent Monsoon: மழைக்கால நோய் தொற்றுகளிலிருந்து தப்பிக்க நீரைக் கொதிக்க வைத்துப் பருகுவதுடன், தெருவோர உணவுகளைத் தவிர்த்துச் சூடான சுகாதாரமான உணவுகளை உண்ண வேண்டும். வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் தூய்மையாக வைத்துக்கொண்டு கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களைத் தடுக்கும்.

மழையை ரசிக்கலாம்… நோய்களை தவிர்க்கலாம்!  மழைக்கால டிப்ஸ்
மாதிரிப்படம்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 15 Oct 2026 11:37 AM IST

மழைக்காலத்தில் (Prevent Monsoon) நோய் தொற்றுகள் வேகமாக பரவுவதால் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து அருந்துவது மிகவும் அவசியமாகும். வயிற்றுப்போக்கு மற்றும் டைபாய்டு போன்ற நோய்களைத் தவிர்க்க வெளிக்கடை உணவுகள் மற்றும் தெருவோரப் பண்டங்களைத் தவிர்த்து வீட்டின் சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஈக்கள் மற்றும் கிருமிகள் மொய்க்காமல் இருக்க சமைத்த உணவுகளை எப்போதும் பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். கொசுக்களின் (Mosquito Control) பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். டெங்கு மற்றும் மலேரியா பாதிப்பில் இருந்து தப்பிக்க மாலை நேரங்களில் உடலை மூடும் ஆடைகளை அணிவது நல்லது. வீட்டிற்கு திரும்பியவுடன் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவுவதன் மூலம் பாக்டீரியா தொற்றைத் தடுக்கலாம். காய்ச்சல் அல்லது சளி அறிகுறிகள் தென்பட்டால் சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Also Read: சாதத்தை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடலாமா? என்ன ஆகும்?

சுத்தமான குடிநீர் பயன்பாடு

மழைக்காலத்தில் குடிநீரின் மூலம் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் மிக விரைவாகப் பரவுகின்றன. இதனால் வயிற்றுப்போக்கு, காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதிலிருந்து தப்பிக்க, தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து பருக வேண்டும். வெளியே செல்லும் போது வீடிலிருந்தே பாதுகாப்பான குடிநீரைக் கொண்டு செல்வது உடலுக்கு மிகவும் நல்லது.

சத்தான மற்றும் சுகாதாரமான உணவு

இக்காலத்தில் வெளிக்கடைகளில் விற்கப்படும் உணவுகள் மற்றும் தெருவோரப் பண்டங்களைத் தவிர்ப்பது அவசியமாகும். உணவில் எளிதில் செரிமானமாகும் சமைத்த சூடான உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்காதவாறு உணவுகளை எப்போதும் மூடி வைக்க வேண்டும். பச்சை காய்கறிகளையும் பழங்களையும் நுகர்வதற்கு முன்பு சுத்தமான நீரில் நன்கு கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

கொசுக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல்

மழைக்காலத்தில் தேங்கும் கழிவுநீரிலும் நன்னீரிலும் கொசுக்கள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்து டெங்கு, மலேரியா மற்றும் சிக்கன்குனியா போன்ற காய்ச்சல்களை உண்டாக்குகின்றன. எனவே, வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காதவாறு தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். கொசு வலைகள் மற்றும் கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவதுடன், மாலை நேரங்களில் உடலை முழுமையாக மூடும் ஆடைகளை அணிவது பாதுகாப்பானது.

Also Read: சாதத்தை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடலாமா? என்ன ஆகும்?

தனிநபர் சுகாதாரம் மற்றும் முன்னெச்சரிக்கை

மழையில் நனைவதைத் தவிர்ப்பதுடன், ஈரமாக இருக்கும் உடைகளுடனும் காலணிகளுடனும் அதிக நேரம் இருக்கக்கூடாது. வீட்டிற்கு வந்தவுடன் கை, கால்களை சோப்பு போட்டுச் சுத்தமாகக் கழுவுவது கிருமித் தொற்றைத் தடுக்கும். சளி, காய்ச்சல் அல்லது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் சுய மருத்துவம் செய்வதைத் தவிர்த்து, உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us