AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதுகு வலிக்கு கரண்ட் சிகிச்சை: வலி நிவாரணமா? ஆபத்தா?

Physiotherapy: TENS சிகிச்சை குறைந்த அலைவரிசை மின் அலைகள் மூலம் தோலின் மேற்பரப்பில் உள்ள நரம்புகளைத் தூண்டி உடனடி வலி நிவாரணம் அளிக்கிறது. IFT சிகிச்சை நடுத்தர அலைவரிசையைப் பயன்படுத்தி உடலின் ஆழமான தசைப் பகுதிகள் வரை ஊடுருவி நீண்டகால வலி, வீக்கம் மற்றும் தசை இறுக்கத்தைக் குறைக்கிறது.

முதுகு வலிக்கு கரண்ட் சிகிச்சை: வலி நிவாரணமா? ஆபத்தா?
கரண்ட் சிகிச்சைImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 04 Sep 2026 06:00 AM IST

எலும்புப் பிரச்சனை, தண்டுவடக் கோளாறு அல்லது தீவிர முதுகு வலியால் அவதிப்பட்டு மருத்துவமனைக்குச் செல்பவர்களுக்கு, பிசியோதெரபி பிரிவில் உடலில் மின்முனைகளைப் பொருத்தி லேசான அதிர்வுகளை வழங்குவதைக் கண்டிருக்கலாம். இதனைப் பலர் ஆபத்தான மின் அதிர்ச்சி என தவறாகப் புரிந்துகொள்கின்றனர். உண்மையில் இது மருத்துவ உலகில் TENS (Transcutaneous Electrical Nerve Stimulation) மற்றும் IFT (Interferential Therapy) என்று அழைக்கப்படும் அதிநவீன மின் நரம்பு தூண்டுதல் சிகிச்சை முறையாகும். நோயாளிகளுக்கு வலி நிவாரணம் அளிப்பதற்காகவே இந்த எலக்ட்ரோதெரபி சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

நரம்பு தூண்டலும் வலி குறைப்பும்

இந்த சிகிச்சையின் போது, பாதிப்புக்குள்ளான முதுகு அல்லது நரம்புப் பகுதிகளில் சிறிய பேட்ச்கள் (Electrodes) ஒட்டப்பட்டு, அதன் வழியே மிகவும் குறைந்த அளவு பாதுகாப்பான மின் அலைகள் பாய்ச்சப்படுகின்றன. இந்த மின் அலைகள் நரம்புகள் வழியாக மூளைக்குச் செல்லும் வலியின் சமிக்ஞைகளை இடைமறித்துத் தடுக்கின்றன. மேலும், உடலின் இயற்கையான வலி நிவாரணியான ‘எண்டார்பின்’ (Endorphins) ஹார்மோனை அதிகளவில் சுரக்கச் செய்வதோடு, இறுக்கமடைந்த தசைகளைத் தளர்த்தி அப்பகுதியில் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. பக்கவிளைவுகள் அற்ற இச்சிகிச்சை மாத்திரைகளின் தேவைகுறைக்க பெரிதும் உதவுகிறது.

TENS மற்றும் IFT சிகிச்சைகளுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகள்

பிசியோதெரபியில் வலி நிவாரணத்திற்காகப் பயன்படுத்தப்படும் TENS (Transcutaneous Electrical Nerve Stimulation) மற்றும் IFT (Interferential Therapy) ஆகிய இரண்டுமே மின் நரம்பு தூண்டுதல் முறைகள் என்றாலும், அவற்றின் இயக்கம் மற்றும் பயன்பாட்டில் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

1. அலைவரிசை மற்றும் ஊடுருவும் திறன் (Frequency and Depth)

TENS: இது குறைந்த அலைவரிசையைக் (Low Frequency) கொண்ட மின்சார அலைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் மின்சார அலைகள் தோலின் மேல் அடுக்கு மற்றும் அதற்கு அடியில் உள்ள நரம்புகளை மட்டுமே தூண்ட முடிகிறது.

IFT: இது நடுத்தர அலைவரிசையைக் (Medium Frequency) கொண்ட இரண்டு வெவ்வேறு மின்சார அலைகளைப் பயன்படுத்துகிறது. இவை ஒன்றோடொன்று குறுக்கிட்டு, உடலின் ஆழமான தசைப் பகுதிகள் மற்றும் மூட்டுகள் வரை ஊடுருவிச் சென்று நிவாரணம் அளிக்கின்றன.

Also Read: H1N1 காய்ச்சல் பரவல்: ஃப்ளூ தடுப்பூசி யாரெல்லாம் கட்டாயம் செலுத்த வேண்டும்?

2. பயன்படுத்தப்படும் பகுதிகள் (Application)

TENS: கை, கால், கழுத்து போன்ற உடலின் மேற்பரப்பில் உள்ள லேசான தசைப் பிடிப்பு மற்றும் உடனடி வலி நிவாரணத்திற்கு (Acute Pain) இது ஏற்றது.

IFT: இடுப்பு வலி, தண்டுவடப் பிரச்சனை, தொடை மற்றும் தோள்பட்டை மூட்டு வலி போன்ற உடலின் ஆழப் பகுதியில் இருக்கும் தீவிர அல்லது நீண்டகால வலிகளுக்கு (Chronic Deep Pain) இது பயன்படுத்தப்படுகிறது.

3. வேலை செய்யும் முறை (Mechanism)

TENS: பெரும்பாலும் நரம்பு பாதைகளை முடக்கி, மூளைக்கு வலி சமிக்ஞைகள் செல்வதைத் தடுப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது.

IFT: வலியைக் குறைப்பதுடன், ஆழமான திசுக்களில் ரத்த ஓட்டத்தை கணிசமாக அதிகரிக்கச் செய்து, வீக்கம் மற்றும் தசை இறுக்கத்தை விரைவாகக் குறைக்கிறது.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us