Food Recipes: சளி, காய்ச்சலால் அவதியா..? இந்த சிக்கன் சூப் ரெசிபி ட்ரை பண்ணுங்க..!

Chicken Soup Recipe: சிக்கன் சூப்பில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள் நல்ல சமநிலையில் உள்ளன. சிக்கனிலிருந்து கிடைக்கும் புரதம் உடலை சரிசெய்து தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. சிக்கனுடன் கேரட் மற்றும் பட்டாணி போன்ற காய்கறிகள் பலவீனத்தைக் குறைக்க அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகின்றன.

Food Recipes: சளி, காய்ச்சலால் அவதியா..? இந்த சிக்கன் சூப் ரெசிபி ட்ரை பண்ணுங்க..!

சிக்கன் சூப்

Published: 

03 Feb 2026 16:59 PM

 IST

சளி அல்லது காய்ச்சலின் (Fever) போது, ​​உடல் பலவீனமடைந்து, வாயில் கசப்பு ஏற்பட்டு எதையும் சாப்பிட விருப்பமில்லாமல் இருக்கும். அந்தவகையில், சிக்கன் சூப் ஆறுதல் அளிப்பது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, சிக்கன் சூப் (Chicken Soup) ஊட்டச்சத்து நிறைந்தது என்பதால், இது நோயின் போது உடல் விரைவாக குணமடைய உதவி செய்யும். நோயின் போது வறுத்த அல்லது எண்ணெய் நிறைந்த உணவுகள் வயிற்று வலியை ஏற்படுத்தும். உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, அதன்படி சிக்கன் சூப் வயிற்றுக்கு கனமாக இருக்காது. அதன் சூடான சூப் தொண்டையை ஆற்றும், அதிலிருந்து நீராவி அடைபட்ட சளியை வெளியேற்ற உதவுகிறது. மேலும், காய்ச்சலின்போது உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது.

சிக்கன் சூப்பில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள் நல்ல சமநிலையில் உள்ளன. சிக்கனிலிருந்து கிடைக்கும் புரதம் உடலை சரிசெய்து தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. சிக்கனுடன் கேரட் மற்றும் பட்டாணி போன்ற காய்கறிகள் பலவீனத்தைக் குறைக்க அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகின்றன. கூடுதலாக, நோயின் போது உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிக முக்கியம். சூடான சிக்கன் சூப் சளியை தளர்த்தும், தொண்டை வலியைத் தணிக்கும் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இது சுவாசத்தை எளிதாக்கும். குளிர்காலத்தில் அனைத்து வகையான சூப்களும் உடலுக்கு அரவணைப்பையும் ஆறுதலையும் அளிக்கின்றன. சிக்கன் சூப் அசைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். ஏனெனில் இது நோயின் போது ஆற்றலையும் மன தளர்வையும் அளிக்கிறது.

ALSO READ: சூடான சாதத்திற்கு சூப்பர் ரெசிபி.. சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி?

சிக்கன் சூப் செய்ய தேவையான பொருட்கள்:

  • வெண்ணெய் – 2 ஸ்பூன்
  • 2 வெங்காயம் – துண்டுகளாக வெட்டியது
  • கேரட், பட்டாணி – ஒரு கைப்பிடி
  • சிக்கன் வேகவைத்த தண்ணீர் – அரைலிட்டர்
  • வேகவைத்த எலும்பு இல்லாத சிக்கன் – 450 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகு தூள்- சிறிதளவு

ALSO READ: மணமணக்கும் மட்டன் புலாவ்.. சாப்பிட ஆசை தூண்டும் ரெசிபி இதோ!

சிக்கன் சூப் செய்வது எப்படி..?

  1. முதலில் ஒரு கடாயை கேஸில் வைத்து, அதில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து சூடாக்கி, பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பட்டாணி மற்றும் கேரட் சேர்த்து காய்கறிகளை சேர்த்து லேசாக வதக்கவும்.
  2. எல்லா காய்கறிகளும் வெந்ததும், அதில் சிக்கன் வேகவைத்த தண்ணீர் சேர்த்து கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.
  3. கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்து, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.
  4. இதற்கு பிறகு, சிக்கனை சேர்த்து, ஒரு கொதி நிலைக்கு கொண்டு வந்து, பின்னர் அடுப்பை ஆஃப் செய்யவும்.
  5. இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி சூடான சூப்பை பருகலாம்.
Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..