Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தெரு நாய்கள் மட்டுமல்ல… இந்த விலங்குகள் கடித்தாலும் ஆபத்து தான்!

Animal Bite First Aid : டெல்லியில் தெரு் நாய்களை 8 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெரு நாய்கள் மட்டுமல்லாமல் சில விலங்குக்ள் மற்றும் பறவைகள் கடிப்பதாலும் நமக்கு பாதிப்பு ஏற்படலாம். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தெரு நாய்கள் மட்டுமல்ல… இந்த விலங்குகள் கடித்தாலும் ஆபத்து தான்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Aug 2025 22:39 PM

கடந்த சில நாட்களாக தெரு நாய் கடித்தல் பற்றிய பல செய்திகள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இவை குழந்தைகளையும் பெரியவர்களையும் கடுமையாக தாக்குகின்றன. நாய் போன்ற விலங்குகள் கடிப்பதால் பல மோசமான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.  மாடு, குதிரை, ஒட்டகம், ஆடு, எலி, பல்லி, காகம், கிளி, பூனை, முயல் போன்ற சில விலங்குகள் மற்றும் பறவைகள் நம் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி வாழ்கின்றன. பலர் அவைகளை செல்லப்பிராணிகளாகவும் வைத்திருக்கிறார்கள். அப்படி அவற்றை வளர்க்கும்போது அவை கடிப்பது மட்டுமல்லாமல், அதன் நகக் கீறல் கூட மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் ஏற்படும் நோய் தொற்று கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி மரணத்திற்கு கூட வழி வகுக்கும். தெரு நாய்களின் அச்சுறுத்தல் இந்தியாவில் கடுமையான சவாலாக மாறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவின் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் இறப்புகள் ரேபிஸால் (Rabies) ஏற்படுகின்றன.

நாய் கடித்தால், முதலில் காயத்தை சோப்பு அல்லது ஓடும் நீரில் 15 நிமிடங்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த கட்டுரையில் நாய் கடியைப் போல பூனை, எலிகள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றை தவிர்ப்பது எப்படி என பார்க்கலாம்.

பூனை

பூனை கடித்தாலோ அல்லது கீறல் பட்டாலோ பார்டோனெல்லா ஹென்சீலே எனப்படும் பாக்டீரியாவை நம் உடலுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.  பூனை கடித்தால் பல கடுமையான நோய்கள் ஏற்படலாம்.  ஒரு பூனை உங்களைக் கடித்தால், கடித்த இடத்தை உடனடியாக கழுவவும் அல்லது கிருமி நாசினியைப் பயன்படுத்தவும். இதற்குப் பிறகு, மருத்துவரிடம் செல்லவும். உங்கள் நிலையைப் பரிசோதித்த பிறகு உங்கள் மருத்துவர் மருந்துகளைப் பரிந்துரைப்பார். ஆனால் பூனை செல்லப்பிராணியா அல்லது தெரு பூனையா என்பதை உங்கள் மருத்துவரிடம் சொல்ல வேண்டும், ஏனெனில் உங்கள் சிகிச்சை அதைப் பொறுத்து மாறுபடும்.

இதையும் படிக்க : இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா? அப்போ நீங்க தனிமையில் இருக்கிறீர்கள்!

எலிகள்

எலிகள் ஆக்ரோஷமானவை அல்ல. அவை பொதுவாக அச்சுறுத்தலை உணரும்போது மட்டுமே கடிக்கின்றன. எலிகளுக்கு மிகவும் வலுவான முன் பற்கள் உள்ளன. அவை கடிக்கும்போது அவை உங்கள் தோலைத் துளைக்கக்கூடும். எலி கடித்தால் ஏற்படும் பொதுவான ஆபத்து பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகள் ஆகும். எலி கடித்தால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.  எலி கடித்தால் ரேபிஸ் ஏற்படாது. கூடுதலாக, எலி கடித்தால் காய்ச்சல், வாந்தி, தலைவலி, தசை வலி, அல்லது மூட்டுகளில் வீக்கம் அல்லது வலி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். எலி கடித்தால் பொதுவாக கடுமையான பாதிப்புகள் இருக்காது. இருப்பினும், ஒருவரை எலி கடித்தால், அவர்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

பல்லி

வீடுகளில் சுவர்களில் பொதுவாகக் காணப்படும் பல்லிகள் பொதுவாகத் தாக்குவதில்லை. ஆனால் சில விஷப் பல்லிகள் உங்களைக் கடித்தால் உடனடி மருத்துவ உதவி தேவை. காய்ச்சல், சீழ் அல்லது சிவப்பு கோடுகள் இருந்தால், அவை தொற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே மருத்துவரை அணுகுவது அவசியம்.

இதையும் படிக்க : Get Rid Of Ants: மழைக்காலத்தில் வீட்டிற்குள் படையெடுக்கிறதா எறும்புகள்..? இயற்கை முறையில் இப்படி விரட்டுங்கள்!

கிளி

கிளி கடித்தால் சிறிய காயங்கள் முதல் கடுமையான காயங்கள் வரை எதுவும் ஏற்படலாம். மேலும் கிளி கடித்தால் பாக்டீரியாவும் பரவக்கூடும். இது சிட்டகோசிஸ் அல்லது பாஸ்டுரெல்லோசிஸ் போன்ற தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.  சிட்டகோசிஸ் என்பது பறவைகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். பாதிக்கப்பட்ட கிளி ஒரு மனிதனைக் கடித்தால், அந்த நபருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

குரங்கு

ஒரு குரங்கு உங்களைக் கடித்தால், ரேபிஸ் மற்றும் பிற பாக்டீரியா தொற்றுகள் உட்பட தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது முக்கியம். உடனடியாக, காயத்தை சோப்பு மற்றும் தண்ணீரில் குறைந்தது 15 நிமிடங்கள் நன்கு கழுவி, பின்னர் மருத்துவரை அணுகவும்.