தந்தையை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய மகன்.. பகீர் வாக்குமூலம்!

Young Man Killed His Father Chopped His Body | லக்னோவில் இளைஞர் ஒருவர் தனது தந்தையை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசியுள்ளார். சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் உடலை எரித்திருப்பேன் என்றும் அவர் போலீசாரிடம் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தந்தையை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய மகன்.. பகீர் வாக்குமூலம்!

தந்தையை கொலை செய்த அக்‌ஷத்

Updated On: 

26 Feb 2026 13:06 PM

 IST

லாக்னோ, பிப்ரவரி 26 : லக்னோவை (Lucknow) சேர்ந்த 21 வயது இளைஞர் தனது தந்தையை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர கொலை குறித்து போலீஸ் விசாரணையில் கூறிய அந்த இளைஞர், சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் தனது தந்தையை தானே எரித்திருப்பேன் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த நிலையில், லக்னோவில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தந்தையை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய மகன்

லக்னோவை சேர்ந்தவர் 21 வயதான அக்‌ஷத் பிரதாப் சிங். இவர் தனது 50 வயது தந்தை மன்வேந்திர சிங்கை கொலை செய்துள்ளார். பிப்ரவரி 20, 2026 அன்று தனது தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த இளைஞர் தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். பின்னர் சில நிமிடங்கள் கழித்து அவரது உடலை மூன்றாவது மாடியில் இருந்து வீட்டின் முதல் தளத்தில் காலியாக உள்ள ஒரு அறைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து தனது தந்தையின் உடலில் இருந்து கை, கால்களை தனி தனியாக வெட்டி எடுத்துள்ளார்.

இதையும் படிங்க : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெண் பக்தரை பாம்பு கடித்ததால் பரபரப்பு!

பிறகு வெட்டி துண்டாக்கப்பட்ட உடல் பாகங்களை தனது வீட்டில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தூரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசியுள்ளார். கை, கால்களை வெட்டி வீசிய நிலையில், மீதமிருந்த உடலை ஒரு நீள நிற டிரம்மில் போட்டு வீசுவதற்காக அவர் காரில் எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அவரது காரை யாரோ தட்டும் சத்தம் கேட்ட நிலையில், அந்த தந்தையின் உடலை டிரம்மிலே வைத்திருந்துள்ளார்.

தந்தையை காணவில்லை என புகார் அளித்த மகன்

அக்‌ஷத் தங்களது தந்தையை கொலை செய்ததை அவரது தங்கை பார்த்துள்ளார். ஆனால், வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என கூறி அக்‌ஷத் அவரை மிரட்டியுள்ளார். இதற்கிடையே போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் விதமாக அவர் தனது தந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அது தொடர்பான விசாரணையில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளியே வந்துள்ளது.

இதையும் படிங்க : துப்பாக்கி முனையில் மணப்பெண்ணை கடத்திச் சென்ற முன்னாள் காதலன்.. பகீர் சம்பவம்!

அக்‌ஷத்தின் படிப்பு தொடர்பாக அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அக்‌ஷத் படிப்பில் விருப்பமில்லாமல் இருந்த நிலையில், அவரது தந்தை அவரை எப்படியாவது மருத்துவராக்க வேண்டும் என கனவு கண்டுள்ளார். இதன் காரணமாக தந்தைக்கும், மகனுக்கு சுமூகமற்ற உறவு நீடித்து வந்துள்ளது. இந்த நிலையில், பல நாட்களாக தந்தை மீது கோபமாக இருந்த அக்‌ஷத் திட்டம் தீட்டி தனது தந்தையை கொலை செய்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow Us
மகனுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான காரை பரிசளித்த ஹர்திக் பாண்ட்யா
பூமிக்கு அருகே வரும் மிகப்பெரிய விண்கல்..
முழுவதும் விஷ பாம்புகளால் நிறைந்த தீவு பற்றி தெரியுமா?
நான்காவது நாளாக தொடர் உயர்வை சந்தித்த தங்கம்.. ரூ.15,000-த்தை நெருங்கியது!