ரூ.40 லட்சம் LPA.. திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் ரேபிடோ ஓட்டும் டெக்கி!

Tech Profession With 40 Lakhs LPA Got Fired Unexpectedly | உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமானவர்கள் தங்களது பணிகளை இழந்து வருகின்றனர். இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் திடீரென வேலையை இழந்த இளைஞர், மாத தவணை செலுத்த ரேபிடோ ஓட்டி வருகிறார்.

ரூ.40 லட்சம் LPA.. திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் ரேபிடோ ஓட்டும் டெக்கி!

இணையத்தில் வைரலாகும் இளைஞரின் வீடியோ

Updated On: 

12 Apr 2026 14:49 PM

 IST

காசியாபாத், ஏப்ரல் 12 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், காசியாபாத் பகுதியில் இளைஞர் ஒருவர் சுமார் 1.4 கோடிக்கு மாத தவணையில் வீடு வாங்கிய நிலையில், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் தற்போது தனது மாத தவணையை செலுத்த ரேப்பிடோ ஓட்டும் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரூ.40 லட்சம் ஆண்டு வருமானம் வாங்கிக்கொண்டு இருந்த நபர் தற்போது தனது வீட்டை காப்பாற்றுவதற்காக இரவு பலகாக உழைத்துக்கொண்டு இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பணி நீக்கம் செய்யப்பட்டதால் ரேப்பிடோ ஓட்டும் டெக்கி

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் அதே வேலையில், ஆபத்தாகவும் இருக்கிறது. காரணம் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகளின் காரணமாக பெரும்பாலான ஊழியர்கள் தங்களது பணிகளை இழந்து வருகின்றனர். அமேசான் உள்ளிட்ட மிகப்பெரிய டெக் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், காசியாபாத்தில் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் இளைஞர் ஒருவர் ரேப்பிடோ ஓட்டி தனது மாத தவணைகளை அடைத்து வருகிறார்.

இதையும் படிங்க : உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா திடீர் ராஜினாமா.. பரபரப்புப் பின்னணி!

இணையத்தில் வைரலாகும் இளைஞரின் வீடியோ

அந்த இளைஞர் ரூ.40 லட்சம் ஆண்டு வருமானம் கொண்ட ஒரு வேலையில் பணியாற்றி வந்த நிலையில், காசியாபாத்தில் உள்ள பிரதீக் கிராண்டி சிட்டியில் ஒரு 3BHK வீட்டை வாங்கியுள்ளார். 2024 ஆம ஆண்டு ரூ.1.4 கோடிக்கு மாத தவணை மூலம் அவர் அந்த வீட்டை வாங்கியுள்ளார். மாதத்திற்கு ரூ.3 லட்சத்திற்கும் குறையாமல் அவர் வருமானம் வாங்கி வந்த நிலையில், மாதம் ரூ.95,000 மாத தவணை செலுத்த வேண்டும் என்பது அவருக்கு பெரிய சவாலாக இல்லாமல் இருந்துள்ளது.

இதையும் படிங்க : பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு.. ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை… அதிரடியில் இறங்கிய சிபிஎஸ்இ!

கனவு வீட்டை சொந்தமாக்கி விட்டோம் என்ற அந்த இளைஞரின் கனவு மிக நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. தான் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மாதம் ரூ.95,000 மாத தவணை செலுத்த வேண்டும் என்பதற்காக அவர் இரவு, பகலாக ரேப்பிடோ ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார்.

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?