பீகாரில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்த முதல்வர் ஸ்டாலின்.. ஜீப் பேரணியில் பங்கேற்பு

Voter Adhikar Yatra : பீகார் வாக்காளர் உரிமை யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். ராகுல் காந்தியுடன் ஜீப்பில் ஏறி, வாக்காளர் உரிமை யாத்திரையை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டார். அவருடன் கனிமொழி எம்.பியும் உடன் இருந்தார். அதோடு, பிரியங்கா காந்தி, தேஜஸ்வி யாதவும் இருந்தனர்.

பீகாரில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்த முதல்வர் ஸ்டாலின்.. ஜீப் பேரணியில் பங்கேற்பு

முதல்வர் ஸ்டாலின்

Updated On: 

27 Aug 2025 13:06 PM

 IST

பீகார், ஆகஸ்ட் 27 : பீகார் மாநிலத்தில் தர்பங்காவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) தலைமையில் நடைபெற்று வரும் வாக்காளர் உரிமை யாத்திரையில் (Voter Adhikar Yatra) முதல்வர் ஸ்டாலின் (CM MK Stalin) பங்கேற்றார். அவருடன் எம்.பி. கனிமொழியும் கலந்து கொண்டுள்ளார். வாக்கு திருட்டு புகார் மற்றும் பீகார் வாக்காளர் சிறப்புத் திருத்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காநதி பீகாரில் வாக்காளர் அதிகார பேரணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பேரணியில் இந்தியா கூட்டணி தலைவர்களும் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில், 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதியான இன்று முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். பீகார் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில், பீகார் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் திருத்தம் மேற்கொண்டது.

இந்த திருத்தத்தின்படி, போலியான வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியது. இதற்கிடையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்கு திருட்டு நடைபெற்றதாகவும் அவர் பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.  இதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் எதிர்ப்பை  தெரிவித்தனர். இதற்கு தேர்தல் ஆணையமும் விளக்கம் அளித்தது.  இதற்கு ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தது.  இதனை எதிர்த்து, பீகார் மாநிலத்தில் வாக்காளர் உரிமை யாத்திரையை 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி பிரம்மாண்டமாக ராகுல் காந்தி தொடங்கினார்.

Also Read : ’இறந்தவர்களுடன் டீ குடித்தேன்’ – தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல்காந்தி

ராகுல் காந்தியுடன் கைகோர்த்த முதல்வர் ஸ்டாலின்


இந்த யாத்திரை மூலம் 1,300 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கிறது. இந்த யாத்திரை 2025 செப்டம்பர் 1ஆம் தேதி பாட்னாவில் முடிவடைகிறது. இந்த பேரணியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். ஜார்க்கண்ட்  முதல்வர் ஹேமந்த் சோரன், தெலங்கானா முதல்வர் ரெவந்த் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இந்த பேரணியில் தற்போது முதல்வர் ஸ்டாலிரன் கலந்து கொண்டுள்ளார்.

Also Read : ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.. ஆவணங்களை சமர்பிக்க உத்தரவு..

தர்மங்காவில் ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் ஜீப்பில் ஏறி பேரணி மேற்கொண்டார். இந்த பேரணியில் எம்.பி கனிமொழியும் கலந்து கொண்டார்.  இதுகுறித்து தனது எக்ஸ தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், “பீகார் நிலம் என்னை வரவேற்கிறது. ஒவ்வொரு திருடப்பட்ட வாக்குகளாலும் மண் கனமாக உள்ளது. வாக்காளர் உரிமை யாத்திரை மக்களின் வலியை தடுத்து நிறுத்த முடியாத பலமாக மாறும். இந்த யாத்திரையில் எனது சகோதரர்கள் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், சகோதரி பிரியங்கா காந்தியுடன் இணைந்தேன்” என குறிப்பிட்டார்.