எஸ்ஐஆர் பணிகள் தாமதமாகக் கூடாது – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தேர்தல் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஏற்படும் தடைகளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்து தீர்வு காணும் என்றும் எஸ்ஐஆர் பணிகள் நடைபெறுவதில் எந்தவிதத் தடையும் அனுமதிக்கப்படாது. இது அனைத்து மாநிலங்களுக்கும் தெளிவாக இருக்க வேண்டும் உச்சநீதிமன்றம் நீதிபதி சூர்யகாந்த் உத்தரவிட்டார்.

மாதிரி புகைப்படம்
வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பாக ஏற்படும் தடைகளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்து தீர்வு காணும் என்றும் ஆனால் அந்த பணிகள் நிறைவு பெறுவதில் எந்தவிதத் தடையும் ஏற்படுத்த கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் (SIR) பணிகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் கூடுதல் வழிகாட்டுதல்களை வழங்கிய உச்சநீதிமன்றம் எஸ்ஐஆர் பணிகளுக்காக குரூப் பி அதிகாரிகளின் பெயர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசை கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது.
மேற்கு வங்க அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
மேலும், எஸ்ஐஆர் பணிகளின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் வன்முறை சம்பவங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற புகார்களை தொடர்ந்து, மேற்கு வங்க காவல்துறை டிஜிபிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவ பிறப்பித்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணையின் போது, முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் ஆஜராகி, மைக்ரோ அப்சர்வர்கள் மத்திய அரசு அதிகாரிகள் என்பதால், உரிய அதிகாரமின்றி வாக்காளர் பெயர்களை நீக்குவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார்.
இதையும் படிக்க : நாடாளுமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை!
ஆனால், தற்போதைய விசாரணையில், தேர்தல் ஆணையம், வாக்குறுதி அளித்த 8,505 அதிகாரிகளின் முழுமையான விவரங்கள் இன்னும் பெற வில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து, தலைமை நீதிபதி சூர்ய காந்த், பிப்ரவரி 4, 2026 அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஏன் தாமதமாக பிப்ரவரி 7, 2026 அன்று மெயில் அனுப்பப்பட்டது? மேலும் தாமதமாக அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.
‘எஸ்ஐஆர் பணிகள் தாமதமாக கூடாது’
இதற்கு பதிலளித்த மேற்கு வங்க மாநில அரசு தரப்பு, தேர்தல் ஆணையத்தின் பதிலுக்காக காத்திருந்ததாகவும், பட்டியல் தயார் நிலையில் இருந்ததாகவும் விளக்கம் அளித்தது. ஆனால், தேர்தல் ஆணையம், மாநில அரசு வழங்கிய விவரங்களில் தேவையான தகவல்கள் இல்லை என மறுத்தது. இதனால், “இந்த விவகாரத்தில் தெளிவு இல்லை என்றால், தலைமைச் செயலாளர் தனிப்பட்ட முறையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் என தலைமை நீதிபதி எச்சரித்தார்.
இதையும் படிக்க : ஒழுக்கமும் ஊக்கமும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது – பரீட்சா பே சர்ச்சா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை..
இந்த விவகாரத்தில் இரு தரப்புகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதை நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. இதுகுறித்து பேசிய நீதிபதி, எஸ்ஐஆர் பணிகள் நடைபெறுவதில் எந்தவிதத் தடையும் அனுமதிக்கப்படாது. இது அனைத்து மாநிலங்களுக்கும் தெளிவாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.