Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தெருநாய்கள் தொடர்பான உத்தரவு.. உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு.. இன்று விசாரணை!

Stray Dogs Case in Supreme Court | கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக தெருநாய்கள் குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக விலங்குகள் ஆர்வலர்கள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

தெருநாய்கள் தொடர்பான உத்தரவு.. உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு.. இன்று விசாரணை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Aug 2025 08:00 AM

புதுடெல்லி, ஆகஸ்ட் 14 : தெருநாய்கள் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் (Supreme Court) தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளும் வழக்கில் 2 நீதிபதிகள் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து விலங்குகள் நல ஆரவலர்கள் (Animals Rights Activist) தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இன்று (ஆகஸ்ட் 14, 2025) விசாரணைக்கு வர உள்ளது. முன்னதாக தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம் – வழக்கு விசாரணை மேற்கொள்ளும் உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் ரேபிஸ் உள்ளிட்ட உயிர்கொள்ளி நோய்க்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக ஆகஸ்ட் 12, 2021 அன்று நடைபெற்ற விசாரணையின் போது தெரு நாய்கள் குழந்தைகள், சிறுவர், சிறுமியர் என அனைத்து தரப்பினருக்கும் குறி வைக்கின்றன. தெருநாய் கடித்தால் பச்சிளம் குழந்தைகள் உட்பட பலருக்கும் ரேபிஸ் நோய்தொற்ரு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் தலைநகர் டெல்லியில் உள்ள தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்.

இதையும் படிங்க : குழந்தைகளுக்காக வாங்கிய பப்ஸில் சுருண்டு கிடந்த பாம்பு.. அதிர்ச்சியான பெண்!

தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

தற்போதைக்கு அடுத்த எட்டு வாரங்களுக்குள் ஐந்தாயிரம் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். இதற்காக டெல்லி யூனியன் பிரதேச நிர்வாகம் உடனடியாக தெருநாய்களை அடைத்து வைப்பதற்கான காப்பகங்களை அதிகரிக்க வேண்டும். தெருநாய்களை கருத்தடை செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். மேலும் அதிகாரிகள் தெருநாய்களை பிடிப்பதற்கு எதிராக தனி நபர்களோ அமைப்புகளோ, குறுக்கே வந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த கடுமையான தீர்ப்புக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மிக கடுமையான விமர்சனங்களை எதிர்ப்புகளை முன் வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Dausa Road Accident: ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து..10 பேர் உயிரிழப்பு!

இன்று விசாரணைக்கு வரும் மேல்முறையீட்டு மனு

இந்த நிலையில் தெருநாயக்கர் தொடர்பாக இரண்டு நீதிபதிகள் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மேல்முறையீட்டு மனு இன்று (ஆகஸ்ட் 14, 2025) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.