Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Prajwal Revanna: பாலியல் வன்கொடுமை வழக்கு.. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை..!

Prajwal Revanna's Accusations: வீட்டு வேலைக்கார பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரண்டு வழக்குகளில் ஆயுள் தண்டனையும், ரூ. 11 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சேலை முக்கிய ஆதாரமாக இருந்தது.

Prajwal Revanna: பாலியல் வன்கொடுமை வழக்கு.. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை..!
பிரஜ்வால் ரேவண்ணாImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 02 Aug 2025 18:35 PM

வீட்டில் வேலை செய்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு (Prajwal Revanna) ஆயுள் தண்டனை (Life Imprisonment) விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம், மிரட்டல் மற்றும் டிஜிட்டல் குற்றங்கள் தொடர்பான வழக்கில் நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 1ம் தேதி பிரஜ்வால் ரேவண்ணாவை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. அதனை தொடர்ந்து, 2 வழக்குகளில் ஆயுள் தண்டனையும், மற்ற வழக்குகளில் மொத்தம் ரூ. 11 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதத்தின் மொத்த தொகையும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக வழங்கவும், பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு தண்டனை இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 2ம் தேதி அமலுக்கு வந்துள்ளது.

ஆதாரமாக சிக்கிய சேலை:


பிரஜ்வால் ரேவண்ணா மீது பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில், வீட்டு வேலை செய்யும் அணிந்திருந்த பெண்ணின் சேலை முக்கிய ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. முன்னாள் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா வீட்டில் வேலை செய்யும் பெண்ணை ஒரு முறை அல்ல, 2 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவத்தின் வீடியோவையும் பதிவு செய்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் அன்றைக்கு அணிந்திருந்த சேலையையும் வைத்திருந்தார். விசாரணையின்போது, சேலையில் விந்தணு அடையாளங்கள் காணப்பட்டன. இது இந்த வழக்கை மேலும் வலுப்படுத்தியது. இந்த சேலை நீதிமன்றத்தில் ஒரு தீர்க்கமான சான்றாக சமர்ப்பிக்கப்பட்டது.

ALSO READ: நான் என்ன பேசணும்? நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு பிரதமர் மோடி.. வெளியான அறிவிப்பு!

2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை:

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், பிரஜ்வால் ரேவண்ணா மோது சிஐடி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த செயலை வீடியோவாகவும் பதிவு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை சிஐடியின் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து, சுமார் 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. விசாரணையின்போது, குழு மொத்தம் 123 ஆதாரங்களை சேகரித்தது.

ALSO READ: ஆபரேஷன் சிந்தூர் – தன்னிறைவு பெற்ற இந்தியாவின் சக்தி.. வாரணாசியில் பிரதமர் மோடி உரை..

ஏழு மாதங்களில் நிறைவடைந்த விசாரணை:

விசாரணையை சிஐடி இன்ஸ்பெக்டர் ஷோபா மற்றும் அவரது குழுவினர் நடத்தினர். இந்த வழக்கில் விசாரணை 2024 டிசம்பர் 31ம் தேதி தொடங்கியது. இதில், நீதிமன்றம் 23 சாட்சிகளின் சாட்சியங்களை பதிவு செய்தது. இது தவிர, வீடியோ கிளிப்புகள் மற்றும் சம்பவ இடத்தின் ஆய்வு அறிக்கைகளின் தடயவியல் அறிக்கையையும் நீதிமன்ற மதிப்பாய்வு செய்தது. இதை தொடர்ந்து, இந்த விசாரணை 7 மாதங்களில் நிறைவடைந்தது.