16 ஆண்டுகளுக்கு பிறகு… முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவமழை.. கொட்டப்போகும் மழை!

southwest monsoon : தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிட்டதட்ட 8 நாட்களுக்கு முன்பே பருவமழை இந்தியாவில் தொடங்கிவிட்டது. அதாவது, ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் பருவமழை, முன்கூட்டியே 2025 மே 24ஆம் தேதியான இன்று தொடங்கிவிட்டது.

16 ஆண்டுகளுக்கு பிறகு... முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவமழை.. கொட்டப்போகும் மழை!

தென்மேற்கு பருவமழை

Updated On: 

24 May 2025 13:15 PM

கேரளா, மே 24 : கேரளாவில் தென்மேற்கு பருவமழை (Southwest monsoon) கேரளாவில் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிட்டதட்ட 8 நாட்களுக்கு முன்பே பருவமழை இந்தியாவில் தொடங்கிவிட்டது. அதாவது, ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் பருவமழை, முன்கூட்டியே 2025 மே 24ஆம் தேதியான இன்று தொடங்கிவிட்டது.  மேலும், 16 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழை இதுபோன்று முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது. கடைசியாக 2009ஆம் ஆண்டு 2025 மே 23ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது.  இந்தியாவில் இரண்டு பருவமழை தான். தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை. ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும்.

தொடங்கியது தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைப் பொழிவு அதிகரித்து காணப்படும். கோடை காலத்திற்கு பிறகு, வரும் பருவமழை என்பதால் தென்மேற்கு பருவமழை மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும். 2024ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் முதலாம் வாரத்தில் தொடங்கியது.

இந்த நிலையில், 2025ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை தற்போது துவங்கி உள்ளது. கிட்டதட்ட  8 நாட்களுக்கு பிறகு, கேரளாவில் பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கான வழக்கமான தேதி ஜூன் 1ஆம் தேதி ஆகும்.

இருப்பினும், முதன்முதலில் 1918 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி மிகவும் முன்கூட்டியே பருவமழை தொடங்கியதாக தெரிகிறது. மறுபுறம், மிகவும் தாமதமாக 1972ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி பருவமழை தாமதமாக தொடங்கியது. இந்த நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்று பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக  வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, கடைசியாக 2009ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.  அதன்பிறகு, தற்போது மே மாதத்தில் முன்கூட்டியே  2025 மே 24ஆம் தேதி பருவமழை தொடங்கியுள்ளது.  பருவமழை தொடங்கியதை அடுத்து, கேரளா,  கேரளாவை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

கொட்டப்போகும் மழை

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு வெளியிட்ட அறிவிப்பில், கிழக்கு மத்திய அரேபிய கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு கொங்கன் கடற்கரையில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 6 கிமீ வேகத்தில் கிழக்கு நோக்கி மெதுவாக நகர்ந்து இன்று மே 24, 2025 அன்று காலை 0830 மணிக்கு தெற்கு கொங்கன் கடற்கரைக்கு அருகில் மையம் கொண்டிருந்தது. இது தொடர்ந்து கிழக்கு நோக்கி நகர்ந்து இன்று மே 24, 2025 அன்று நண்பகலில் ரத்னகிரிக்கும் டப்போலிக்கும் இடையில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு கொங்கன் கடற்கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.