Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

17 செயற்கைகோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-62.. இன்று தொடங்கும் கவுண்ட்டவுன்!

PSLV C62 to launch Tomorrow From Sriharikota | இந்திய விண்வெளி ஆய்வு மையம் நாளை தனது 2026 ஆம் ஆண்டின் முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவ உள்ளது. இந்த ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் இன்று (ஜனவரி 11, 2026) காலை 10.17 மணி முதல் தொடங்குகிறது.

17 செயற்கைகோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-62.. இன்று தொடங்கும் கவுண்ட்டவுன்!
பிஎஸ்எல்வி சி-62
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Jan 2026 11:38 AM IST

ஸ்ரீஹரிகோட்டா, ஜனவரி 11 : ஸ்ரீஹரிகோட்டாவில் (Sriharikota) இருந்து நாளை (ஜனவரி 12, 2026) விண்ணில் பாய தயாராக உள்ள பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று (ஜனவரி 11, 2026) தொடங்க உள்ளது. காலை சரியாக 10.17 மணிக்கு இந்த கவுண்ட்டவுன் தொடங்க உள்ளது. இந்த நிலையில், விண்ணில் ஏவப்பட தயாராக உள்ள இந்த பிஎஸ்எல்வி சி-62 (PSLV C-62) ராக்கெட் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நாளை விண்ணில் ஏவப்பட தயாராக உள்ள பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட்

ஆந்திர பிரதேச (AP – Andhra Pradesh) மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதஷீஜ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து நாளை (ஜனவரி 12, 2026) காலை 10,17 மணிக்கு பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. 2026 ஆம் ஆண்டில் இஸ்ரோ (ISRO – Indian Space Research Organization) ஏவும் முதல் ராக்கெட்டாக இது அமைந்துள்ளது.

இதையும் படிங்க : சாலை விபத்துகளை தடுக்க மத்திய அரசின் மாஸ்டர் பிளான்.. வாகனங்களில் இனி V2V தொழில்நுட்பம் கட்டாயம்!

17 செயற்கைக்கோள்களுடன் ஏவப்பட உள்ள ராக்கெட்

இந்த ராக்கெட்டில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் டிஆர்டிஓ சேவைக்காக ஐஇஎஸ் 1 என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, ஸ்பானிஷ் செயற்கைக்கோளான “கெஸ்ட்ரல் இனிஷியல் டெனாஸ்ஸ்ரேட்டர்” என்ற ஒரு சிறிய வகை சோதனை கருவியும் இந்த ராக்கெட்டுடன் விண்ணில் அனுப்பப்பட உள்ளது.

இதையும் படிங்க : சென்னைக்கு ஷாக்.. கடலில் மூழ்கும் அபாயம் என வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.. முழு விவரம்!

இந்த ராக்கெட் உடன் இந்தியா, மொரிஷூயஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள நிறுவனங்கள் ஆராச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோளும் இதனுடன் விண்ணில் ஏவப்பட உள்ளது.