அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ள, கனிம வளங்கள் நிறைந்ததும் மக்கள் தொகை குறைந்ததுமான கிரீன்லாந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இது தேசிய பாதுகாப்புக்கு மிக முக்கியமான பகுதி என அவர் தெரிவித்துள்ளார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், கிரீன்லாந்தைச் சுற்றி ரஷ்ய மற்றும் சீன கப்பல்கள் அதிகமாக இருப்பதாகவும், இதனால் அமெரிக்காவுக்கு அந்தப் பகுதி அவசியம் எனவும் கூறினார். இந்த கருத்துகள் ஐரோப்பாவில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால், அது நேட்டோ கூட்டணியின் முடிவாக அமையும் என்று டென்மார்க் எச்சரிக்கை விடுத்துள்ளது.