Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“பலருக்கு தூக்கம் வராது” சசி தரூர் செய்த செயல்.. காங்கிரஸை கலாய்த்த பிரதமர் மோடி

கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் பாஜகவில் இணைவதாக பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில், 2025 மே 2ஆம் தேதியான இன்று பிரதமர் மோடி விமான நிலையத்தில் வரவேற்று இருக்கிறார். மேலும், நிகழ்ச்சி மேடையில் சசி தரூர் பெயரை குறிப்பிட்டு, காங்கிரஸை விமர்சித்துள்ளார்.

“பலருக்கு தூக்கம் வராது” சசி தரூர் செய்த செயல்..  காங்கிரஸை கலாய்த்த பிரதமர் மோடி
சசி தரூர் - பிரதமர் மோடிImage Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 May 2025 11:59 AM

கேரளா, மே 02 : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் (Shashi Tharoor), மே 2ஆம் தேதியான இன்று கேரளாவில் பிரதமர் மோடி (PM Modi) கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அவரும் பங்கேற்றார். அப்போது, அவருடன் கேரள முதல்வர் பினராயி விஜயனும் உடன் இருந்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். கடந்த சில சில ஆண்டுகளாகவே சசி தரூர் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக பேச்சுகள் அடிபட்டது. ஆனால், இது வெறும் தகவல்களாகவே இன்று வரை சென்றுக் கொண்டிருந்தது. ஆனால், தற்போது அதற்கான சமிக்ஞைகளும் தொடங்கி இருக்கின்றன.

“பலருக்கு தூக்கம் வராது”

அதாவது, கேரளாவில் இன்று விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து கேரளா வந்தடைந்தார். அப்போது, அவரை வரவேற்க சசி தரூர் விமான நிலையத்திற்கே சென்றிருக்கிறார். அவரை வரவேற்று இருக்கிறார். இது தொடர்பாக புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சசி தரூர், “டெல்லி விமான நிலையத்தில் தாமதம் இருந்தபோதிலும், எனது தொகுதிக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க திருவனந்தபுரத்தில் சரியான நேரத்தில் தரையிறங்கினேன்” என்று கூறினார். இவரது பதிவு காங்கிரஸ் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் திறப்பு விழாவிலேயே சசி தரூர் பெயரை குறிப்பிட்டு பிரதமர மோடி பேசியுள்ளார். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார். இதுகுறித்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இன்று, சசி தரூர் இங்கே அமர்ந்திருக்கிறார். இன்றைய நிகழ்ச்சி சிலரின் தூக்கத்தைக் கெடுக்கும். செய்தி எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்றுவிட்டது” என்றார்.

காங்கிரஸை கலாய்த்த மோடி


ரஷ்யா-உக்ரைன் போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நடந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியை சசி தரூர் பாராட்டி உள்ளார். மேலும், கொரோனா பெருந்தொற்றை கையாண்ட விதம் குறித்தும் பிரதமர் மோடியை அவர் பாராட்டி இருக்கிறார்.

திருவனந்தபுரம் தொகுதியில் தரூரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜீவ் சந்திரசேகர் கூட சமீபத்தில் புகழ்ந்து தள்ளினார். காங்கிரஸ் கட்சியில் விவேகம் உள்ள குரல்களில் ஒருவர் சசி தரூர் என ராஜீவ் சந்திரசேகர் பேசியிருந்தார்.  பிரதமர் மோடியை பாராட்டி பேசியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. அண்மையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சசி தரூம் சந்தித்து பேசினர். கட்சி ரீதியாக எந்த பதவியும் கொடுக்காமல் ஓரக்கட்டுவதால் சசி தரூர் அதிருபத்யில் இருப்பதாக கூறப்படுகிறது.