பருத்தி தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற பெண்.. புலி தாக்கி பரிதாப பலி!
Woman Died By Tiger Attack | மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வனப்பகுதிக்கு அருகே உள்ள பருத்தி தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற பெண், அங்கு வந்த புலி கொடூரமாக தாக்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மும்பை, டிசம்பர் 14 : மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலம், சந்திராபூர் மாவட்டம், சிந்த்வாகி கிராமத்தை சேர்ந்த பெண் அருணா. 45 வயதாகும் அவர் நேற்று (டிசம்பர் 13, 2025) அவர் வசிக்கும் கிராமத்திற்கு அருகே உள்ள பருத்தி தோட்டத்திற்கு பருத்தி எடுக்கும் வேலைக்காக சென்றுள்ளார். இந்த நிலையில், வனப்பகுதிக்கு அருகே உள்ள பருத்தி காட்டிற்கு சென்ற அருணாவை அங்கிருந்த புலி ஒன்று மிக கடுமையாக தாக்கி, அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளது.
புலி தாக்கி பரிதாபமாக பலியான பெண்
பருத்தி தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற அருணாவை மிக நீண்ட நேரமாகியும் காணாததால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடி அந்த பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது பருத்தி காட்டிற்கு செல்லும் வழியில் வனப்பகுதியில் அருணா புலி தாக்கி பலியாகி சடலமாக கிடந்ததை கண்டு அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க : 2.5 லட்சம் மதிப்பிலான கிளிக்காக உயிரை விட்ட தொழிலதிபர்.. பெங்களூரில் சோக சம்பவம்!
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை
இது குறித்து அருணாவின் உறவினர்கள் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அருணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அருணாவை புலி தாக்கியது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : பூட்டிய வீட்டிற்குள் சடலமாக தூக்கில் தொங்கிய தாய் மற்றும் மகன்கள்.. பகீர் சம்பவம்!
வனத்துறைக்கு கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்
வனப்பகுதிக்கு அருகில் உள்ள தோட்டங்களில் பொதுமக்கள் வேலைக்கு செல்வது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை, புலி, சிறுத்தைகள் தாக்கி பொதுமக்கள் பலியாவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், இது குறித்து வனத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி மக்கல் கோரிக்கை வைத்துள்ளனர்.