சபரிமலை போறீங்களா? இந்த 2 நாட்கள் முன்பதிவு ரத்து.. முழு விவரம்!
President Murmu Visit Sabarimala Temple : கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரண்டு நாட்கள் ஆன்லைன் தரிசன டிக்கெட் ரத்து செய்யப்படுதவாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2025 மே 18ஆம் தேதி சபரிமலையில் தரிசனம் செய்ய உள்ள நிலையில், ஆன்லைன் தரிசன டிக்கெட் ரத்து செய்யப்படுகிறது.

கேரளா, மே 06 : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு (Sabarimala Temple) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு (Prsident Draupadi Murmu) வருகை தர உள்ள நிலையில், ஆன்லைன் முன்பதிவு இரண்டு நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திரௌபதி முர்மு 2025 மே 18,19ஆம் தேதிகளில் சபரிமலைக்கு வருகை தருவதால், பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது. உலக பிரசித்தி பெற்றது சபரிமலை ஐயப்பன் கோயில். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்தியா முழுவதும் பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாக, கார்த்திகை மாதத்தில் வரும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு பக்தர்களின் கூட்டம் சபரிமலை கோயிலில் அலைமோதும்.
சபரிமலை போறீங்களா?
அதோடு, மாதாந்திர பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டு, குறிப்பிட்ட நாட்களுக்கு மூடப்படும். எனவே, ஆண்டுதோறும் ஐயப்பன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், வைகாசி மாத பூஜைக்காக 2025 மே 15ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில், சபரிமலை கோயிலில் இரண்டு நாட்கள் ஆன்லைன் முன்பதிவு ரத்து என்று தேவஸ்தானம் அறிவித்தள்ளது.
அதாவது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாட்களாக பயணமாக கேரளா செல்ல உள்ளார். 2025 மே 18ஆம் தேதி கேரளாவுக்கு வருகை தரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்ம, 2025 மே 19ஆம் தேதி காலை பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்.
அதாவது, கேரளா வரும் அவர், ஹெலிகாப்டர் மூலம் நிலக்கர் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் பம்பை செல்லும் திரௌபதி முர்மு, நடைபயணமாக ஐயப்பன் கோயிலுக்கு செல்ல உள்ளார். திரௌபதி முர்மு வருகையை முன்னிட்டு, 2025 மே 18,19ஆம் தேதிகளில் பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
இந்த 2 நாட்கள் முன்பதிவு ரத்து
திரௌபதி முர்மு வருகையை அடுத்து, சபரிமலை கோயில், பம்பை, நிலக்கல் மற்றும் அவர் தங்கம் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் பலப்படுத்து நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். குடியரசுத் தலைவர் முர்மு செல்லும் இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது.
மேலும், குடியரசுத் தலைவர் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், பம்பை, நிலக்கல், சபரிமலை கோயிலில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. மேலும், பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சபரிமலை தேவசம் போர்டு (TDB) தலைவர் பி.எஸ். பிரசாந்த் கூறுகையில், “குடியரசுத் தலைவர் திரௌபது முர்மு வருகையொட்டி, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பம்பையியில் குடியரசுத் தவைலர் மலையேருவாரா என்பது குறித்து சிறப்பு பாதுகாப்பு குழு முடிவு செய்யும்” என்றார். கேரளாவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் வருவது இதுவே முதல்முறையாகும். குறிப்பாக, பெண் தலைவர் செல்வது அரிதாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.