AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கொரோனா பேட்ச் MBBS மாணவர்களுக்கு ஜாக்பாட்.. முதலாண்டு தேர்வை எழுதக் கூடுதலாக ஒரு வாய்ப்பு.. அதிரடி உத்தரவு!

MBBS 2019-20 Batch COVID Students: 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்து கொரோனா தொற்றுக் காலத்தில் தேர்வுகளை முடிக்கத் திணறிய மாணவர்களுக்குத் தேசிய மருத்துவ கவுன்சில் ஒரு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதலாண்டு தேர்வை எழுதக் கூடுதலாக ஒரே ஒருமுறை தேர்வு எழுதும் வாய்ப்பை (Extra Attempt) வழங்கி NMC ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா பேட்ச் MBBS மாணவர்களுக்கு ஜாக்பாட்.. முதலாண்டு தேர்வை எழுதக் கூடுதலாக ஒரு வாய்ப்பு.. அதிரடி உத்தரவு!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 17 Oct 2026 08:50 AM IST

அக்டோபர், 17: உலகத்தையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கல்வி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவர்கள் கடுமையான சவால்களையும் மன உளைச்சல்களையும் எதிர்கொள்ள நேரிட்டது. குறிப்பாக, மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களைப் பொறுத்தவரை ஆன்லைன் வகுப்புகளின் சிரமங்கள், நேரடிப் பயிற்சிக்கு இருந்த தடைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாகத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில் பெரும் தொய்வு ஏற்பட்டது. அந்த வகையில், கடந்த 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் (MBBS) படிப்பில் சேர்ந்த மருத்துவ மாணவர்கள், தங்களுடைய முதலாம் ஆண்டுத் தேர்வுகளை உரிய காலத்திற்குள் முடிக்க முடியாமல் பெரும் தவிப்புக்குள்ளாகினர். பல பல்கலைக்கழகங்களும் மாணவர்களும் விடுத்த தொடர் கோரிக்கைகளைக் பரிசீலித்துள்ள தேசிய மருத்துவ கவுன்சில் (NMC), இந்த மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கூடுதலாக ஒருமுறை தேர்வு எழுதும் சிறப்பு வாய்ப்பை வழங்கி அதிரடி ஒப்புதலை அளித்துள்ளது.

இதையும் படிக்க: எதிர்காலத்தில் இந்தியாவிற்கு என்னென்ன திறன்கள் தேவைப்படும்? AI யுகம் குறித்த அப்டேட்!

கொரோனா கால தாக்கமும் மாணவர்களின் கோரிக்கையும்:

கடந்த 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் இளநிலை மருத்துவப் படிப்பான எம்பிபிஎஸ் வகுப்புகளில் இணைந்த மாணவர்கள், தங்களது மருத்துவப் படிப்பின் தொடக்கக் காலத்திலேயே கொரோனா தொற்றுப் பரவலின் கோரப்பிடியில் சிக்கினர். நேரடி வகுப்புகள் மற்றும் மருத்துவமனைப் பயிற்சிகள் முற்றிலுமாக முடங்கியதாலும், மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் உடல்நலக் குறைவுகளால் பாதிக்கப் பட்டதாலும் அவர்களால் முதலாம் ஆண்டுத் தேர்வுகளில் போதிய கவனம் செலுத்த இயலவில்லை. இதன்காரணமாகப் பல மாணவர்களால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முதலாண்டுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாமல் போனது. எம்பிபிஎஸ் விதிகளின்படி குறிப்பிட்ட காலவரையறைக்குள் தேர்வுகளை முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்குக் கூடுதலாக ஒருமுறை தேர்வு எழுதுவதற்கான கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தேசிய மருத்துவ கவுன்சிலுக்குத் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வந்தனர்.

மருத்துவ கவுன்சிலின் ஒப்புதலும் புதிய வாய்ப்பும்:

மாணவர்கள் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று, கடந்த மாதம் 23-ஆம் தேதியன்று தேசிய மருத்துவ கவுன்சிலின் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2019-2020 கல்வியாண்டில் எம்பிபிஎஸ் சேர்ந்த மாணவர்களின் தற்போதைய சூழ்நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், அந்த மாணவர்களுக்குத் தங்களது முதல் தொழில்முறை தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு வசதியாக, ஒரே ஒரு முறை மட்டும் கூடுதலாகத் தேர்வு எழுதும் ‘மெஸ் அட்டெம்ட்’ வாய்ப்பை வழங்க ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்தியப் பெண்களின் வேலைவாய்ப்புப் புள்ளிவிவரங்கள் குறித்த உண்மையான நிலை என்ன? எண்கள் சொல்லும் நிஜக் கதை

மாணவர்களுக்குக் கிடைக்கும் பயன்கள்:

தற்போது நடைமுறையில் உள்ள நான்கு அட்டெம்ட் வாய்ப்புகளுடன் சேர்த்து, இந்தச் சிறப்புச் சலுகையின் மூலமாகக் கூடுதலாகக் கிடைக்கும் ஒரே ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவர்கள் முதலாண்டுத் தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெறலாம். தங்களது மருத்துவப் படிப்பு காலத்தின் நான்கு ஆண்டுகளை ஏற்கனவே கடந்திருந்தாலும், மாணவர்களின் கல்வி நலனைக் காக்கும் பொருட்டு தேசிய மருத்துவ கவுன்சில் அளித்துள்ள இந்த அறிவிப்பு கொரோனா பேட்ச் மருத்துவ மாணவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us