Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இளநிலை நீட் 2025… தேர்வு மையம் விவரம் வெளியீடு.. பார்ப்பது எப்படி?

NEET UG Exam 2025 : 2025ஆம் ஆண்டிற்கான இளநிலை நீட் தேர்வு 2025 மே 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாணவர்களுக்கான தேர்வு மைய விவரங்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் 552 நகரங்களில் நடைபெற உள்ளது.

இளநிலை நீட் 2025… தேர்வு மையம் விவரம் வெளியீடு.. பார்ப்பது எப்படி?
இளநிலை நீட் தேர்வுImage Source: PTI/Pinterest
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 24 Apr 2025 09:56 AM

2025ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான (NEET UG Exam) நீட் தேர்வுக்கு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு யைமத்திற்கான (NEET UG Exam Center) இடம் குறித்த தகவலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 2025 மே 4ஆம் தேதி நீட் இளநிலை தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர்களுக்கான தேர்வு மையத்தை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவ இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கும், முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

நீட் இளநிலை தேர்வு 

ஆண்டுதோறும் நடைபெறும் நீட் தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுகின்றனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் எனும் இளநிலை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வின் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், மாணவர்கள்  மாநில கல்லூரிகளில் இடங்கள்  ஒதுக்கப்படுகிறது.

அந்த வகையில், 2025ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு 2025 மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் தேர்வுக்கு சில நாட்களே உள்ளன. 2025ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு 2025 பிப்ரவரி 7ஆம தேதி தொடங்கி, மார்ச் 7ஆம் தேதி வரை நடந்தது.  நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் 2025 மே 1ஆம் தேதி வெளியாகும்.

இந்த நிலையில், இளநிலை நீட் தேர்வு மாணவர்களுக்கான தேர்வு மையத்திற்கான இடம் விவரம் வெளியாகி உள்ளது.  இதனை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. எந்தெந்த மாணவர்களுக்கு எந்த இடத்தில் தேர்வு என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.  இதனை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வை மைய அறிவிப்பை பார்ப்பது எப்படி?

  • நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதில், Advance city information என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, விண்ணப்ப எண், பாஸ்வோர்ட் உள்ளிட்ட விவரத்தை உள்ளீட வேண்டும்.
  • இதன்பிறகு, மாணவர்களுக்கு ஒரு பிடிஎஃப் படிவம் இருக்கும். அதில், மாணவர்களின் விவரம், தேர்வு தேதி, நேரம், தேர்வு மையம், நகரம் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும்.
  • இதன் மூலம் முன்கூட்டியே மாணவர்கள் தேர்வு மைய விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள்

2025ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு 2025 மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது.  2025 மே 4ஆம் தேதி பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 552 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 இடங்களிலும் பேனா மற்றும் காகித முறையில் நடைபெற உள்ளது.

இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றை உள்ளடக்கிய 180 கேள்விகள் இடம்பெறும். மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு சரியான விடைக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கும்போது, ஒவ்வொரு தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படுகிறது. பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது குறிப்பிடத்தக்கது.

DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...