PM Modi : பஞ்சாப், இமாச்சலுக்கு செல்லும் பிரதமர் மோடி.. மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார்!
PM Modi Visit to Flood Hit Places | வட இந்திய மாநிலங்கள் கடும் மழை வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப் மற்றும் இமாச்சல் ஆகிய பகுதிகளுக்கு பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 09, 2025) பிற்பகல் 1.30 மணிக்கு பயணம் செய்ய உள்ளார்.

புதுடெல்லி, செப்டம்பர் 09 : பஞ்சாப் (Punjab) மற்றும் இமாச்சல பிரதேசத்திற்கு (Himachal Pradesh) இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) இன்று (செப்டம்பர் 09, 2025) பயணம் செய்ய உள்ளார். உத்தராகண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், இந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமரின் பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேச பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசத்திற்கு செல்லும் பிரதமர் மோடி
வட இந்தியா பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக உத்தர பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் கனமழையின் தாக்கம் மிக தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சேதங்களை சந்தித்துள்ளனர். இந்த பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த அந்த மாநில அரசுகள் முழு வீச்சில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதையும் படிங்க : ஆயுள் தண்டனை அனுபவிக்கும் பிரஜ்வால் ரேவண்ணா.. சிறையில் நூலக எழுத்தாளராக நியமனம்..




வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி
இவ்வாறு கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 09, 2025) கடுமையான மழை வெள்ள பாதிப்புகளை சந்தித்துள்ள பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசத்திற்கு பிரதமர் மோடி பயணம் செய்ய உள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
இதையும் படிங்க : அமெரிக்க – இந்தியா உறவு.. டிரம்பை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி… நெகிழ்ச்சி பதிவு
பிரதமர் பயணம் குறித்து அறிவித்த பிரதமர் அலுவலகம்
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் இமாச்சலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நாளை (செப்டம்பர் 09, 2025) பிற்பகல் 1.30 மணிக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் இருந்தவாறு பார்வையிடுகிறார். இதனை தொடர்ந்து இமாச்சலின் காங்ரா பகுதியில் எற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும், தேசிய பேரிடர் மீட்பு படையினரையும் கங்ரா பகுதியில் சந்தித்து பேச உள்ளார் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.