சமையல் செய்ய தாமதம்.. மனைவியின் தலையை வெட்டி மரத்தில் தொங்க விட்ட கொடூர கணவன்!
Husband Killed Wife Over Cooking In Bihar | பீகாரில் சமையல் செய்ய தாமதமான நிலையில், ஆத்திரமடைந்த கணவன், மனைவியின் தலையை வெட்டி வீட்டின் முன்பு இருக்கும் மரத்தில் தொங்க வைத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா, ஜூலை 30 : பீகார் (Bihar) மாநில, ஜெனாபாத் பகுதியை சேர்ந்தவர் குணால். இவருக்கு திருமணமாகி அன்ஷி என்ற என்ற 25 வயது மனைவி இருந்துள்ளார். குமார், வேலைக்கு செல்லாமல் எப்போதும் மது போதையில் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதன் காரணமாக கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் தான், நேற்று (ஜூலை 29, 2026) குணாலின் குடும்பத்தினர் வயலுக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது அன்ஷி வீட்டில் இருந்துக்கொண்டு, குடும்பத்திற்காக உணவு சமைத்துக்கொண்டு இருந்துள்ளார்.
உடனடியாக சாப்பாடு வேண்டும் என சண்டை போட்ட குணால்
வேலைக்கு சென்ற இடத்தில் குணால், தனது நண்பர்கள் உடன் இணைந்து மது குடித்துள்ளார். அப்போது தலைக்கேறிய போதையில் வீட்டிற்கு சென்ற அவர், உடனடியாக சாப்பாடு பரிமாற வேண்டும் என்று மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு அன்ஷி, உணவு தயாராக்கிக்கொண்டு இருக்கிறது. சிறிது நேரத்தில் முழுவதுமாக தயாராகிவிடும் என்று கூறியுள்ளார். ஆனால், அதனை கேட்டதும் குணாலுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கர்நாடகாவில் முதல்வர் விஜய்யின் போஸ்டர் கிழிப்பு – தீவிரமடையும் காவிரி பிரச்னை
சாப்பாட்டால் கணவன் – மனைவி இடையே சண்டை
அப்போது அவர் அன்ஷியிடம் ஏன் இவ்வளவு தாமதமாக சமையல் செய்கிறாய் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அன்ஷி, இன்னும் சற்றும் நேரத்தில் சாப்பாடு தயாராகிவிடும் என கூறியுள்ளார். இந்த நிலையில், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற குணால், வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து, மனைவியை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் அன்ஷி தனது கணவரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், குணால் அவரது கழுத்தில் கோடாரியால் வெட்டியதில் அன்ஷியின் தலை துண்டாக விழுந்துள்ளது.
இதையும் படிங்க : தேர்வுத் தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டம்.. ஆண்டி பேப்பர் லீக் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
பிறகு தனது மனைவியின் தலையை வீட்டின் முன்பு இருக்கும் மரத்தில் கட்டி வைத்துவிட்டு அங்கேயே அமர்ந்திருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குணாலை கைது செய்த நிலையில் அன்ஷியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.