Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காதலுக்காக நண்பரை கொலை செய்த பரிதாபம் – கர்நாடகாவில் பரபரப்பு சம்பவம்

Friend Kills Friend Over Love Triangle: கர்நாடகாவில், கோலஹள்ளியைச் சேர்ந்த வேணுகோபால் தனது நண்பன் தர்ஷனை, காதல் தகராறில் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளான். வேணுகோபாலின் முன்னாள் காதலி பவித்ரா, தர்ஷனை திருமணம் செய்துகொள்ள இருந்ததால், வேணுகோபால் இந்தக் கொடூரச் செயலைச் செய்தான். போலீசார் வேணுகோபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலுக்காக நண்பரை கொலை செய்த பரிதாபம் – கர்நாடகாவில் பரபரப்பு சம்பவம்
காதலுக்காக நண்பரை கொலை செய்த பரிதாபம்Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 09 Jun 2025 12:27 PM

கர்நாடகா ஜூன் 09: கர்நாடக மாநிலம் (Karnataka) கோலஹல்லியைச் சேர்ந்த வேணுகோபால், பவித்ரா என்பவரை காதலித்து வந்தார். பின்னர் பவித்ரா, வேணுகோபாலின் நண்பர் தர்ஷனை காதலித்து திருமணத்துக்கு ஏற்பாடாகிறது. இதுகுறித்து தெரிந்த வேணுகோபால், தர்ஷனை சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சமாதானமாக பேசுவதாகக் கூறி தர்ஷனை ஊரின் ஒதுக்குப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு மது அருந்திய பின், வேணுகோபால் தனது நண்பர் தர்ஷனை கத்தியால் குத்தி கொலை செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வேணுகோபாலைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலுக்காக நண்பரை கொலை செய்த பரிதாபம்

கர்நாடக மாநிலம் கோலஹல்லியைச் சேர்ந்த 24 வயதான வேணுகோபால், அதே பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற 22 வயதான பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பவித்ரா, வேணுகோபாலை விட்டு விலகிச் சென்றார். அதன் பிறகு பவித்ரா மற்றும் வேணுகோபாலின் நெருங்கிய நண்பர் தர்ஷனுக்குள் நட்பு உருவாகி, நாளடைவில் அது காதலாக மாறியது.

தர்ஷன் – பவித்ரா காதல் இருவரின் குடும்பத்திற்கும் தெரிய வந்த நிலையில், தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், பின்னர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் இந்த உறவு குறித்து வேணுகோபாலுக்கு தகவல் தெரியாமல் இருந்தது. பின்னர் நண்பரே தனது முன்னாள் காதலியை திருமணம் செய்யப் போவதை அறிந்த வேணுகோபால் அதிர்ச்சியடைந்து, தர்ஷனை சந்தித்து பேச திட்டமிட்டார்.

இருவருக்கும் வாக்குவாதம்

வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வர அழைத்த வேணுகோபால், “நான் அவளை காதலித்தேன் என்பது உனக்குத் தெரியும், நடுவில் நீ வந்ததால்தான் அவள் என்னை விட்டுப் போனாள்” எனக் கூற, தர்ஷன் “அவள் உன்னை விட்டுப் போனது அவளது விருப்பம், பின்னர் எதற்கு என்மீது கோபம்?” என பதிலளித்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்குதல்

சமாதானமாக பேசவேண்டும் எனக் கூறி, வேணுகோபால் தர்ஷனை ஊரின் ஓர பகுதிக்குள் அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் மது அருந்திய பின், போதை தலைக்கேறிய வேணுகோபால் தனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தர்ஷனை பலமுறை குத்தியுள்ளார். தர்ஷன் உயிரிழந்த நிலையில், பொதுமக்கள் தகவலளிக்க, போலீசார் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மக்களின் உதவியுடன் வேணுகோபாலை கைது செய்த போலீசார் விசாரணையில் சம்பவத்தின் முழு பின்னணியும் வெளிப்பட்டுள்ளது. காதல் காரணமாக நண்பர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது.