குனோ தேசிய பூங்காவில் சிறுத்தை குட்டி உயிரிழப்பு…என்ன காரணம்!

Leopard Cub Dies: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடப்பட்ட 10 மாத சிறுத்தை குட்டி பரிதாபமாக உயிரிழந்தது . இந்தக் குட்டியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

குனோ தேசிய பூங்காவில் சிறுத்தை குட்டி உயிரிழப்பு...என்ன காரணம்!

சிறுத்தை குட்டி உயிரிழப்பு

Updated On: 

06 Dec 2025 15:16 PM

 IST

மத்திய பிரதேச மாநிலம், குனோ தேசிய பூங்காவில் ஏராளமான சிறுத்தைகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தாயுடன் 2 சிறுத்தை குட்டிகள் காட்டுக்குள் விடப்பட்ட ன. இதில், ஒரு சிறுத்தை குட்டி பரிதாபமாக உயிரிழந்ததது. சர்வதேச சிறுத்தை தினத்தன்று மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ், தென்னாப்பிரிக்க பெண் சிறுத்தையான வீராவை, அதன் 2 குட்டிகளுடன் குனோ தேசிய பூங்கா காட்டுக்குள் விட்டார். சுமார் 10 மாதமுடைய வீராவின் குட்டிகளில் ஒன்று காட்டில் இறந்து கிடந்தது அண்மையில் தெரிய வந்தது. உடனே, இறந்து கிடந்த புலிக் குட்டியின் சடலத்தை மீட்டு கால் நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த குட்டியின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கை கிடைத்த பிறகு இறப்புக்கான சரியான காரணம் உறுதி செய்யப்படும் என்று சீட்டா திட்டத்தின் கள இயக்குநர் தெரிவித்தார். இதனிடையே, வீராவும் மற்ற குட்டியும் ஒன்றாக உள்ளன.

சிறுத்தை தினத்தன்று குட்டிகள் விடுவிப்பு

கடந்த வியாழக்கிழமை சர்வதேச சிறுத்தை தினத்தையொட்டி, குனோ தேசிய பூங்காவின் பரோண்ட் வனப்பகுதியில் உள்ள காட்டுக்குள் 6 வயதான வீரா என்ற பெண் சிறுத்தையை அதன் 2 குட்டிகளையும் முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் விடுவித்தார். ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் தற்போது 28 சிறுத்தைகள் உள்ளன. அவற்றில் 8 நமீபிய மற்றும் தென்னாப்பிரிக்க சிறுத்தைகள் (5 பெண் மற்றும் 3 ஆண்) மற்றும் 20 இந்தியாவில் பிறந்த குட்டிகள் உள்ளன.

மேலும் படிக்க: பெற்ற மகள்களையே பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. தனது தாயையும் விட்டு வைக்காத கொடூரம்!

குனோ தேசிய பூங்காவில் 28 சிறுத்தைகள்…

குனோ தேசிய பூங்காவில் மீதம் இருக்கும் 28 சிறுத்தைகளில், வீரா மற்றும் அதன் 10 மாதமுடைய தனி சிறுத்தை குட்டி உட்பட 18 சிறுத்தைகள் காடுகளில் உள்ளன. அதே நேரத்தில் 33 மாத வயதுடைய முகி மற்றும் அதன் 5 குட்டிகள் உட்பட மீதமுள்ள 10 சிறுத்தைகள் கூண்டுகளில் வைக்கப்பட்டுள்ளன. வீராவின் குட்டியின் மரணம், மூன்று மாதங்களுக்குள் இந்தியாவில் பிறந்த சிறுத்தை குட்டியின் இரண்டாவது மரணம் ஆகும்.

சிறுத்தையுடன் சண்டையிட்டு உயிரிழந்ததா…

கடந்த செப்டம்பர் 15- ஆம் தேதி, நமீபியா சிறுத்தை ஜ்வாலாவின் 20 மாத பெண் குட்டி, குனோ தேசிய பூங்காவில், சிறுத்தையுடன் சண்டையிட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் 4 குட்டிகளுடன் ஜ்வாலா கூண்டிலிருந்து காட்டுக்குள் விடுவிக்கப்பட்டது. தற்போது, 3 குட்டிகளுடன் அதே காட்டில் வசித்து வருகிறது.

மேலும் படிக்க: இண்டிகோ சேவை ரத்து.. கவுண்டரில் ஏறி நின்று வெளிநாட்டு பெண் பயணி வாக்குவாதம்.. வீடியோ!!

இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
சட்டப்படி வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
விருது விழாவில் கவனம் ஈர்த்த ஷாருக்கானின் ரூ.13 கோடி ரோலெக்ஸ் வாட்ச் - அப்படி என்ன ஸ்பெஷல்?