Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிவேக ஆம்புலன்ஸ்… குறுக்கே வந்த யானை.. கேரளாவில் திக் திக் சம்பவம்!

Kerala elephant viral video கேரளாவில் நோயாளியுடன் அதி வேகமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸை காட்டு யானை ஒன்று வழி மறித்து ஆக்ரோஷமாக தாக்க முயன்றது. இதில், ஆம்புலன்ஸின் ஓட்டுநர் சமயோசிதமாக செயல்பட்டு யானையை காட்டுக்குள் விரட்டினார். இதனால், நோயாளி உள்பட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அதிவேக ஆம்புலன்ஸ்… குறுக்கே வந்த யானை.. கேரளாவில் திக் திக் சம்பவம்!
வழிமறைத்த யானை
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 02 Dec 2025 12:12 PM IST

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கட்டுமானப் பணியின் போது பலத்த காயமடைந்த புலம் பெயர்ந்த தொழிலாளியை சக தொழிலாளர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, காட்டு யானை ஒன்று ஆம்புலன்ஸை வழி மறித்து தாக்க முயன்றது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு ஆக்ரோஷமாக தாக்க வந்த யானையை காட்டுக்குள் விரட்டினார். இதனால், ஆம்புலன்ஸில் பயணித்த கட்டட தொழிலாளி மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்புலன்ஸ் வாகனத்தை ஆக்ரோஷமாக தாக்க வந்த காட்டு யானை

மறையூர்-உடுமலைப்பேட்டை பகுதியில் ஆம்புலன்ஸ் சென்ற போது, அந்தப் பகுதியில் உள்ள காட்டில் இருந்து திடீரென காட்டு யானை ஒன்று வெளியே வந்தது. அப்போது, ஆம்புலன்ஸை பார்த்த காட்டு யானை வாகனத்தை வழி மறித்து தாக்குவதற்காக ஓடி வந்தது. சுமார் 20 மீட்டர் தூரம் யானை ஓடி வந்த நிலையில், செய்வதறியாமல் திகைத்து நின்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செல்வா உடனே சாமர்த்தியமாக செயல்பட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தின் சைரன் மற்றும் ஹாரனை அடித்தார்.

ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பாதியில் நின்ற காட்டு யானை

இந்த பலத்த சத்தத்தால் ஆக்ரோஷமாக ஓடி வந்த காட்டு யானை அச்சமடைந்து பாதியில் நின்றது. பின்னர், சிறிது நேரம் கழித்து யானை மெதுவாக காட்டுக்குள் சென்றது. சுமார் 10 நிமிடம் நீடித்த இந்த நிகழ்வால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செல்வா, காயமடைந்த கட்டட தொழிலாளி ஆகியோர் மரண பீதி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க: ஐயப்ப பக்தர்கள் விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு

வாகனங்கள் – மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் யானை

கேரளாவில் மலை சார்ந்த மாவட்டத்தில் மனிதர்கள் விலங்குகள் இடையேயான மோதல் போக்குக்கு இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டு என்று பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்தில் பாலக்காடு மாவட்டத்தில் சாலையில் சென்ற வாகனங்கள் மீது யானை தாக்குதல் நடத்தியிருந்தது. இதே போல, அதிரப்பள்ளி – மலக்கப்பாரா நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று சாலையை மறித்து முகாமிட்டதால் சுமார் 18 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை கடித்துக் கொன்ற சிறுத்தை.. ஷாக் சம்பவம்!

கபாலி யானையை காட்டுக்குள் விரட்ட கோரிக்கை

மேலும், கடந்த ஆண்டு காட்டு யானை ஒன்று ஆம்புலன்ஸை வழிமறித்ததுடன், அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை மறித்து அதில் வந்த நபரை தாக்கியது. எனவே, உள்ளூரில் கபாலி என்று அழைக்கப்படும் காட்டு யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டுமாறு வனத்துறையை பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.