1800 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா – பயணிகளின் பாதுகாப்புக்காக இந்திய ரயில்வே அதிரடி
Railway Alert : இந்திய ரயில்வே ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சிசிடிவி கேமராக்களை பொறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகறது. அதன் ஒரு பகுதியாக 1800 ரயில் பெட்டிகளுக்கு சிசிடிவி கேமராக்கள் பொறுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உலகின் மிக நீளமான ரயில் போக்குவரத்தை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மற்ற போக்குவரத்தைக் காட்டிலும் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் அதிக வசதிகள் இருப்பதால் மக்கள் அதிக அளவு ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். சமீபகாலமாக மக்களின் பயணிகளுக்கு ஏதுவாக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்தியன் ரயில்வே தற்போது சிசிடிவி கேமராக்களை பொறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக சில இடங்களில் ஏஐ கேமராக்கள் பொறுத்தப்படவுள்ளன.
1800 ரயில் பெட்டிகளுக்கு சிசிடிவி கேமரா
இந்தியன் ரயில்வே தற்போது 1800 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா பொறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக எல்எஃப்பியில் தயாராகும் 895 பெட்டிகள் மற்றும் ஐசிஎஃப்பில் தயாராகும் 887 ரயில் பெட்டிகளுக்கு சிசிடிவி கேமரா பொறுத்தப்படவுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
தற்போது பிரக்யராஜ், டாக்டர் அம்பேத்கர் நகர் எக்ஸ்பிரஸ், கலிந்தி எக்ஸ்பிரஸ், டேராடூன் எக்ஸ்பிரஸ், மீரட் சிட்டி சங்கம் எகஸ்பிரஸ், ஸ்ரீமேத்தா வைஷ்னோ தேவி கட்ரா ஜம்மு மெயில் ஆகிய நிறுவனங்களுக்கு முதற்கட்டமாக சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படவுள்ளன.
இதையும் படிக்க : ரயில் டிக்கெட் முன்பதிவில் 20% தள்ளுபடி – எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!
ஏஐ கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
பிரக்யராஜ் எக்ஸ்பிரஸ், ஷ்ரம்சக்தி எக்ஸ்பிரஸ் போன்ற ப்ரீமியம் ரயில்களில் ஏஐ மூலம் இயங்கும் கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இந்த கேமராக்கள் அதிகாரிகள் உதவி இல்லாமல் நேரடியாக கண்காணிக்கும். குறிப்பாக சந்தேகத்துக்கு இடமான செயல்பாடுகளை உடனடியாக கண்டறிந்து அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அனுப்பும் திறன் இதற்கு உண்டு. மேலும் இது கூடுதல் பாதுகாப்பு வசதிகள் வழங்குகின்றன.
சிசிடிவி கேமராக்களின் சிறப்பம்சங்கள்
கேமராக்களை பொறுத்தவரை முதல், இரண்டாவது, மூன்றாவது வகுப்பு ஏசி பெட்டிகளுக்கு உயர் தர கேமராக்கள் பொருத்தப்படும். அதே போல ஜெனரல் பெட்டிகள், ஸ்லீப்பர் பெட்டிகள் ஆகியவற்றுக்கு 6 கேமராக்கள் பொருத்தப்படும்.
இதையும் படிக்க : ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல் – டிக்கெட் புக் செய்யும் முறையில் புதிய மாற்றம்
- மணிக்கு 100 கி.மீட்டர் வேகத்தில் ரயில் செல்லும்போது கூட தெளிவான வீடியோக்களை பதிவு செய்யும்.
- குறைவான வெளிச்சம் இருந்தால் கூட தெளிவாக காட்சிகளை பதிவு செய்யும்
- ரயில்வேயின் முகப்பு போன்ற இடங்களில் முழுமையான கண்காணிப்பு கிடைக்கும்.
- அனைத்து வீடியோ காட்சிகள் நேரடியாக தலைமை அலுவலகங்கள் கிளை அலுவலகங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உதவும்.
விரைவில் நாடு முழுவதும் அனைத்து ரயில்களிலும் இந்த சிசிடிவி கேமராக்கள் பொறுத்தும் நடைமுறை செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி ரயில்களிலும் நடைபெறும் குற்றச்செயல்கள் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.