புதினுக்கு வழங்கப்பட்ட இந்திய உணவுகள்…கேட்டாலே நாவில் எச்சில் ஊறுகிறது!

Indian Food Served To Putin: இந்தியாவுக்கு இரு நாள் பயணமாக வந்திருந்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு ஜனாதிபதி மாளிகையில் இந்தியாவின் பல்வேறு உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அது என்னென்ன உணவுகள் என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

புதினுக்கு வழங்கப்பட்ட இந்திய உணவுகள்...கேட்டாலே நாவில் எச்சில் ஊறுகிறது!

ரஷ்ய அதிபருக்கு இந்திய உணவு பரிமாறல்

Updated On: 

06 Dec 2025 12:03 PM

 IST

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் இரு நாட்கள் பயணமாக அண்மையில் இந்தியா வந்திருந்தார். அவருக்கு நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) குடியரசுத் தலைவர் மாளிகையில் அரசு விருந்து அளிக்கப்பட்டது. அதில் முற்றிலும் சைவ உணவு வகைகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாரம்பரிய “தாலி” யில் இந்தியாவின் வளமான பிராந்திய உணவு வகைகளை வெளிப்படுத்திய சமையல் நிகழ்ச்சி என குறிப்பிட்டா். ரஷ்ய அதிபருக்கு வழங்கப்பட்ட உணவு வகைகளில் தென்னிந்திய ரசம் (சூப்), முருங்கை இலை சாறுடன் விருந்து தொடங்கியது.

இந்திய உணவு வகைகள்

இதைத் தொடர்ந்து, குச்சி டூன் செடின் ( காஷ்மீரி வால்நட் சட்டினியுடன் நிரப்பப்பட்ட மொரல்ஸ்), காலே சேன் கே ஷிகாம்பூரி ( பான்- கிரில் செய்யப்பட்ட கருப்பு பயிறு கபாப்ஸ்) மற்றும் காரமான சட்டினியுடன் காய்கறி ஜோல் மோமோ போன்ற பசியூட்டும் உணவுகள் வழங்கப்பட்டன. மேலும், ஜஃப்ரானி பனீர் ரோல், பாலக் மேத்தி மட்டர் கா சாக், தந்தூரி பர்வான் ஆலு, ஆச்சாரி பைங்கன் மற்றும் மஞ்சள் தால் தட்கா, உலர் பழங்கள் மற்றும் குங்குமப்பூ புலாவ் ஆகியவற்றுடன் லச்சா பரந்தா, மகஸ் நான், சதனாஜ் ரொட்டி, மிஸ்ஸி ரொட்டி மற்றும் பிஸ்கு போன்ற இந்திய ரொட்டிகளும் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க: இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்…ரஷ்ய அதிபர் கொடுத்த பரிசு!

இந்திய கடற்படையின் இசைக்குழு நிகழ்ச்சி

பாதாம் கா ஹல்வா, கேசர்-பிஸ்தா குல்ஃபி, புதிய பழங்கள், குர் சந்தேஷ், முரக்கு போன்ற பாரம்பரிய உணவுகளுடன், பல்வேறு ஊறுகாய்கள் மற்றும் சாலடுகள் உள்ளிட்டவை இனிப்பு வகைகளில் இடம்பெற்றன. மாதுளை, ஆரஞ்சு, கேரட் மற்றும் இஞ்சி சாறுகள் அடங்கிய ஆரோக்கியமான பானங்களும் புதினுக்கு பரிமாறப்பட்டன. நிகழ்வில், இந்திய பாரம்பரிய இசையை ரஷ்ய மெல்லிசைகளுடன் இணைத்து ராஷ்டிரபதி பவன் கடற்படை இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், அமிர்தவர்ஷினி, காமஜ், யமன், சிவரஞ்சினி, நளினகாந்தி, பைரவி மற்றும் தேஷ் போன்ற இந்திய ராகங்களும், கலிங்கா மற்றும் சாய்கோவ்ஸ்கியின் நட்கிராக்கர் சூட்டின் பகுதிகள் உள்ளிட்ட ரஷ்ய மெல்லிசைகளும், பிரபலமான இந்தி திரைப்படப் பாடலான ஃபிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானியும் நிகழ்வில் இடம்பெற்றன.

இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மை

இந்த நிகழ்வின் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை புடின் எடுத்துரைத்தார், தானும் பிரதமர் மோடியும் ஏற்றுக்கொண்ட பிரகடனம் அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், எரிசக்தி, கல்வி மற்றும் பிற துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரந்த அளவிலான ஒத்துழைப்பை உள்ளடக்கியது என்பதைக் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: “கூடங்குளம் அனுமின் திட்டத்திற்கு உறுதுணையாக இருப்போம்”.. ரஷ்ய அதிபர் புதின் உறுதி!!

சதமடித்த கோலி.. மனைவி அனுஷ்கா சர்மாவின் பதிவு..
ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.. புத்தாண்டில் வருகிறது புதிய வசதி!
லாட்டரி மூலம் இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்
ஓய்வு குறித்து முதன்முறையா மனம் திறந்த கமல்ஹாசன்!