இந்தியா என்னையும், எங்கள் நாட்டையும் 100% நம்பலாம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு!
America President Donald Trump On India | இந்தியா என்னையும், என் நாட்டையும் நம்பலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற அமெரிக்க சுதந்திரத்தின் 250வது விழாவில் தொலைபேசி மூலம் பேசிய டொனால்ட் டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.
டெல்லி, மே 25 : இந்தியா என்னையும், எங்கள் நாட்டையும் 100 சதவீதம் நம்பலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தெரிவித்துள்ளார். அமெரிக்க சுதந்திரத்தின் 250வது விழாவில் தொலைபேசி வாயிலாக பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்தியா குறித்தும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) குறித்தும் டிரம்ப் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு விழா
அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லி பாரத் மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது பேசிய அவர், இந்திய பிரதமர் மோடி சிறந்த தலைவர். அவர் என் நண்பர். மோடியின் மிகப்பெரிய ரசிகன். அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் உறவு இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ ஜப்பான் மாம்பழம்.. ஒடிசாவில் விளைய வைத்து அசத்திய விவசாயி!
என்னையும், எங்கள் நாட்டையும் 100% நம்பலாம் – டொனால்ட் டிரம்ப்
இந்தியா என்னையும், எங்கள் நாட்டையும் 100 சதவீதம் நமபலாம். எப்போதாவது உதவி தேவைப்பட்டால், எங்களை தொடர்புக்கொள்ளலாம் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்கியோ கோர் ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சந்திரயான்-3க்கு உலகின் உயரிய விண்வெளி விருது! இந்தியாவுக்கு கிடைத்த கௌரவம்
சர்வதேச அளவில் நிலவும் அசாதாரண சூழலுக்கு மத்தியில் இந்தியா குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளது கவனத்தை பெற்றுள்ளது.