AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சந்திரயான்-3க்கு உலகின் உயரிய விண்வெளி விருது! இந்தியாவுக்கு கிடைத்த கௌரவம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் இந்த திட்டம், நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்த நிலையில் இதனை கௌரவிக்கும் விதமாக இந்த 2026 காடர்ட் விண்வெளி விருது விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான்-3க்கு உலகின் உயரிய விண்வெளி விருது! இந்தியாவுக்கு கிடைத்த கௌரவம்
Chandrayaan 3
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 22 May 2026 15:43 PM IST

சந்திரயான்-3 திட்டத்திற்கு உலகின் மிக உயரிய விண்வெளி விருதுகளில் ஒன்றான 2026 காடர்ட் விண்வெளி விருது வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் இந்த திட்டம், நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்த நிலையில் இதனை கௌரவிக்கும் விதமாக இந்த விருது கிடைத்துள்ளது. இந்த விருதை அமெரிக்கன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஏராநாட்டிக்ஸ் அண்ட் ஏரோநாட்டிக்ஸ் (American Institute of Aeronautics and Astronautics) அமைப்பு வழங்கியுள்ளது.

சந்திரயான்-3க்கு உலகின் உயரிய விண்வெளி விருது!

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏவப்பட்ட சந்திரயான்-3, அதே ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய உலகின் 4வது நாடு என்ற பெருமையை இந்தியா மேலும், இதுவரை யாரும் களமிறங்காத நிலவின் தென் துருவப் பகுதியில் முதன்முறையாக தரையிறங்கிய நாடு என்ற அளவிலும் இந்தியா உலக வரலாற்றில் இடம்பிடித்தது.

இந்த விருது, விண்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரிய சாதனைகள் புரிந்த திட்டங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மனிதகுலத்தின் எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு உதவும் முக்கிய பங்களிப்புகளையும் இந்த விருது கவுரவிக்கிறது. சந்திரயான்-3 திட்டம் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக செயல்பட்டதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நிலவு குறித்து ஆய்வுகளுக்கும் புதிய பாதையை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த திட்டம் வெற்றிகரமாக நடைபெற்ற காலத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்த சோமநாத், இந்த விருது இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கான அங்கீகாரம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்ற நாட்டின் எண்ணத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, இந்திய விஞ்ஞானிகள் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களை செய்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினர். தரையிறங்கும் தொழில்நுட்பம், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கணினி கட்டுப்பாடுகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டன. அதன் பலனாக சந்திரயான்-3 திட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வெற்றியை பெற்றது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவில் இறங்கிய விக்ரம் மற்றும் பிரக்யான் ரோவர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டன. நிலவின் வெப்பநிலை, மண் அமைப்பு, நில அதிர்வு மற்றும் கனிமத் தன்மைகள் குறித்து முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இந்த தகவல்கள் எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் வாழ்வதற்கும், மேலும் ஆழமான விண்வெளி ஆராய்ச்சிகளுக்கும் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Follow Us