பாலியல் உறவுக்கு மறுத்ததால் ஆத்திரம்.. 2வது மாடியில் இருந்து மனைவியை தூக்கி வீசிய கணவன்!

Husband Threw Wife From Second Floor | உத்தர பிரதேசத்தில் கட்டாய உடலுறவுக்கு மறுத்த மனைவியை அவரது கணவர் இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார். இதன் காரணமாக உடல் முழுவதும் பலத்த காயமடைந்த அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாலியல் உறவுக்கு மறுத்ததால் ஆத்திரம்.. 2வது மாடியில் இருந்து மனைவியை தூக்கி வீசிய கணவன்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

30 Oct 2025 07:46 AM

 IST

லக்னோ, அக்டோபர் 30 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ் அகிர்வார். இவர் தீஜா என்ற பெண்ணை 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், ஒரு ஆண்டு கழித்து முகேஷின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் பலமுறை இரவில் வீட்டிற்கு வராமல் இருந்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த தீஜா, கணவரிடம் அது குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் தீஜாவை கடுமையாக திட்டி தாக்கவும் செய்துள்ளார்.

பாலியல் உறவுக்கு மறுத்ததால் கணவன் செய்த கொடூரம்

இந்த நிலையில், அக்டோபர் 28,2025 அன்று இரவு வழக்கம் போல வெளியே சென்றுவிட்டு தாமதமாக வீட்டுக்கு வந்த முகேஷ், தீஜாவை தன்னுடன் பாலியல் உறவில் இருக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால், தீஜா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் முகேஷுக்கு கடும் கோபம் வந்துள்ளது. அதன் காரணமாக அவர் தனது மனைவி தீஜாவை, இரண்டாவது மாடியில் இருந்து கீழே தூக்கி வீசியுள்ளார்.

இதையும் படிங்க : Delhi Airport: டெல்லி விமான நிலையத்தில் தீ பிடித்து எரிந்த பேருந்து.. கிளம்பிய கரும்புகை! போராடி தீயை அணைந்த ஊழியர்கள்..!

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் தீஜா

இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டதன் காரணமாக பலத்த காயமடைந்த தீஜா, வலியால் அலறி துடித்துள்ளார். அதனை கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடல் முழுவதும் காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த தீஜாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : ரீல்ஸ் எடுக்கும்போது ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ.. வைரலாகும் வீடியோ!

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீஜா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது கணவர் முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் உறவுக்கு இணங்காததால் கணவன், தனது மனைவியை இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.