AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வடமேற்கு இந்தியாவில் வானிலை மாற்றம்.. மேற்கு காற்றழுத்த அலை தாக்கத்தால் கனமழை எச்சரிக்கை

வானிலை ஆய்வாளர்களின் தகவலின்படி, மேற்கு காற்றழுத்த அலை மத்தியதரைக் கடல் பகுதியில் உருவாகி இந்தியாவை நோக்கி நகரும் போது, அதனுடன் தொடர்புடைய பகுதிகளில் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மேக மூட்டமான நிலையும் காணப்படும். செயற்கைக்கோள் கண்காணிப்புகள், இந்த பகுதிகளில் வளிமண்டலம் அதிக ஈரப்பதத்துடனும் நிலையற்ற தன்மையுடனும் மாறி வருவதை காட்டுகின்றன.

வடமேற்கு இந்தியாவில் வானிலை மாற்றம்.. மேற்கு காற்றழுத்த அலை தாக்கத்தால் கனமழை எச்சரிக்கை
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Apr 2026 22:31 PM IST

ஏப்ரல் 3, 2026: இந்தியாவின் பல பகுதிகளில் வானிலை நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சக்திவாய்ந்த மேற்கு காற்றழுத்த அலை (Western Disturbance) உருவாகத் தொடங்கியுள்ளதால் இந்த மாற்றம் ஏற்படுகிறது. இன்று, இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் சுமார் 1,000 கி.மீ பரப்பளவில் மேக மூட்டம் காணப்பட்டது என்று செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இந்த பரந்த மேக மூட்டம், வலுவான மேற்கு காற்றழுத்த அலை உருவாகி வருவதை குறிக்கிறது.

இந்த மேற்கு காற்றழுத்த அலை செயல்பாட்டுக்கு வந்தவுடன், வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் கணிசமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தாக்கம் எதிர்பார்க்கப்படும் மாநிலங்கள்:
• ஜம்மு மற்றும் காஷ்மீர்
• ஹிமாச்சலப் பிரதேசம்
• பஞ்சாப்
• ஹரியானா
• ராஜஸ்தான்
• டெல்லி

பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு:

வானிலை ஆய்வாளர்களின் தகவலின்படி, மேற்கு காற்றழுத்த அலை மத்தியதரைக் கடல் பகுதியில் உருவாகி இந்தியாவை நோக்கி நகரும் போது, அதனுடன் தொடர்புடைய பகுதிகளில் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மேக மூட்டமான நிலையும் காணப்படும். செயற்கைக்கோள் கண்காணிப்புகள், இந்த பகுதிகளில் வளிமண்டலம் அதிக ஈரப்பதத்துடனும் நிலையற்ற தன்மையுடனும் மாறி வருவதை காட்டுகின்றன.

மேலும் படிக்க: லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு.. கேரளா சூப்பர் மார்க்கெட் ஊழியருக்கு ஜாக்பாட்!

மேலும் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

• வட மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகம்
• சில இடங்களில் திடீர் கனமழை ஏற்படலாம்
• ஆலங்கட்டி மழை (hailstorm) சமவெளி மற்றும் மலை அடிவார பகுதிகளில் ஏற்படும் சாத்தியம் உள்ளது
• பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய சூறாவளி போன்ற நிலை உருவாகலாம்
• மழையுடன் கூடிய குளிர்ந்த காற்று வீசுவதால் வெப்பநிலை தாறுமாறாக குறையலாம்
• விவசாயத்திற்கு சில பகுதிகளில் இது பயனுள்ளதாக இருந்தாலும், சில பயிர்களுக்கு சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளது
• போக்குவரத்து பாதிப்புகள் (சாலை, ரயில், விமானம்) ஏற்படும் வாய்ப்பு உள்ளது
• மலைப்பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிக்கலாம்
• மின்தடை மற்றும் மரங்கள் விழுதல் போன்ற சம்பவங்கள் ஏற்படலாம்
• மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது

மேலும் படிக்க: குடும்ப தகராறு.. உபியில் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்!

மொத்தத்தில், அடுத்த சில வாரங்களில் வட இந்தியா மற்றும் வடமேற்கு பகுதிகளில் குளிர்ச்சியான வானிலை நிலவும் என்றும், இடியுடன் கூடிய மழை தொடர்ச்சியாக இருக்கும் என்றும் வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us