காசாவில் போர் எவ்வளவு ஆழமாக மனிதர்களின் வாழ்க்கையை பாதித்திருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு மனதை உருக்கும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. ஒரு புலம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் முகாமில், சிறிய குழந்தைகள் குழுவொன்று ஒரு பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.