மூன்று நாட்கள் கிணற்றுக்குள் உயிருக்கு போராடி முதியவர் மீட்பு.. பரபரப்பு சம்பவம்!
Old Man Rescued From Well In Karnataka | கார்நாடகா மாநிலம், மங்களூரு பகுதியில் கிணற்றுக்குள் தவறி விழுந்து சுமார் மூன்று நாட்கள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி தவித்து வந்த முதியவர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
மங்களூரு, ஏப்ரல் 07 : கர்நாடகா (Karnataka) மாநிலம், உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாச ஆச்சார்யா என்ற 62 வயது முதியவர். யாருடைய உதவியும் இன்றி தனியாக வசித்து வரும் இந்த முதியர், ஏப்ரல் 04, 2026 அன்று தனது வீட்டின் முன்பு உள்ள சுமார் 20 அடி ஆழ கிணற்றை சுத்தம் செய்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக முதியவர் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். கிணற்றுக்குள் விழுந்த அவர் மூன்று நாட்களுக்கு பிறகு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மூன்று நாட்கள் கிணற்றுக்குள் சிக்கி தவித்த முதியவர்
கிணற்றுக்குள் விழுந்த அந்த முதியவர் மோட்டார் பம்புசெட் மற்றும் கயிற்றை பிடித்துக்கொண்டு உதவிக்காக கத்தி கூச்சலிட்டுள்ளார். ஆனால், கிணற்றுக்கு அருகில் யாரும் இல்லாததால், முதியவர் உள்ளே விழுந்தது யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இவ்வாறு, சுமார் மூன்று நாட்கள் அந்த முதியவர் உணவு, தண்ணீர் எதுவுமின்றி கிணற்றுக்குள் உயிருக்காக போராடிக்கொண்டு இருந்துள்ளார்.
இதையும் படிங்க : மூன்றாவது குழந்தையை கருக்கலைப்பு செய்யாததால் ஆத்திரம்.. மனைவி மற்றும் மகள்களை நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்த நபர்!
நண்பர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்ட முதியவர்
முதியவர் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை யாரும் தெரிந்துக்கொள்ளாத நிலையில், மூன்று நாட்களுக்கு பிறகு அவர் மீட்கப்பட்டுள்ளார். அதாவது, மூன்றாவது நாள் முதியவரின் நண்பர் ஒருவர் அவரது வீட்டிற்கு சிலிண்டர் கேட்க வந்துள்ளார். அப்போது வீட்டில் முதியவர் இல்லாததால் அக்கம், பக்கத்தில் தேடியுள்ளார். எங்கு தேடியும் முதியவரை காணவில்லை.
இதையும் படிங்க : 6ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. 2026 முதல் அமல்.. சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு!
இந்த நிலையில், வீட்டின் முன்பு இருந்த கிணற்றில் அவர் எட்டி பார்த்துள்ளார். அப்போது முதியவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர் அளித்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் முதியவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மூன்று நாட்கள் உணவு, தண்ணீர் என எதுவும் இன்றி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த முதியவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.