India COVID-19 Update: இந்தியாவில் 6000 ஐ கடந்த கொரோனா.. அதிகரிக்கும் உயிரிழப்புகள்! எச்சரிக்கும் மத்திய அமைச்சகம்..!

India Coronavirus Deaths: இந்தியாவில் கொரோனா தொற்று 6,000-ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 65. கேரளா, குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் அதிக பாதிப்பு. மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் தயார்நிலை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

India COVID-19 Update: இந்தியாவில் 6000 ஐ கடந்த கொரோனா.. அதிகரிக்கும் உயிரிழப்புகள்! எச்சரிக்கும் மத்திய அமைச்சகம்..!

கொரோனா பாதிப்பு

Published: 

08 Jun 2025 19:22 PM

டெல்லி, ஜூன் 8: இந்தியாவில் கொரோனா தொற்று (Corona) அதிகரித்து வரும் நிலையில், இது மக்களிடையே பயத்தை அதிகரிக்க செய்துள்ளது. அதன்படி, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 6000 ஐ கடந்துள்ளது. அதேநேரத்தில், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் (India) அதிகபட்சமாக கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 144 பேர் பாதிக்கப்பட்டு, மொத்தமாக 1,950 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், இந்தியாவில் இன்னும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கும்படியும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் (Ministry of Health) தெரிவித்துள்ளது.

6000 ஐ கடந்த கொரோனா தொற்று:

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், பாதிப்பானது 6,000 ஐ கடந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று அதாவது 2025 ஜூன் 8ம் தேதி வெளியிட்டன. அதன்படி, கேரளாவில் அதிகபட்சமாக 1,950 பேரும், குஜராத்தில் 822, டெல்லியில் 686, மகாராஷ்டிராவில் 595, கர்நாடகாவில் 366, உத்தரபிரதேசத்தில் 219, தமிழ்நாட்டில் 194, ராஜஸ்தானில் 132 மற்றும் ஹரியானாவில் 102 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் கொரோனா தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவரது வயது 51, 2வது நபரின் வயது 64, 3வது நபரின் வயது 92 ஆகும். உயிரிழந்த 3 பேரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் இறந்தனர். உயிரிழந்த இரண்டு ஆண்களின் வயது 51 மற்றும் 78 வயது ஆகும். இது தவிர, தமிழ்நாட்டில் 42 வயதுடைய கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு ஆணும் உயிரிழந்துள்ளார்.

கடந்த 48 மணிநேரத்தில் 769 பேர் பாதிப்பு:

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் 6,000 -ஐ தாண்டியுள்ள நிலையில், கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் 769 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளது. கொரோனா தொற்று இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மருத்துவமனைகளிலும் தயார்நிலையை சரிபார்க்க மத்திய அரசு முகாம் மற்றும் தேவையான பயிற்சிகளை நடத்தி வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆக்ஸிஜன், தனிமைப்படுத்தும் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் 65 இறப்புகள்:

இந்தியாவில் இதுவரை 6,133 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 6 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், 2025ம் ஆண்டு ஜனவரி முதல் இந்தியாவில் 65 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2025 மே 22ம் தேதி இந்தியாவில் மொத்த பாதிப்பு 257 பாதிப்புகளாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட கண்காணிப்பு குழுக்கள் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் (ILI) மற்றும் கடுமையான கடுமையான சுவாச நோய் (SARI) வழக்குகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.