லக்கேஜ் ஏன் அதிகமா இருக்கு? விமான ஊழியர்களை அட்டாக் செய்த ராணுவ அதிகாரி.. ஸ்ரீநகர் ஏர்போர்ட்டில் பரபரப்பு

Army Officer Attacks Spicejet Staffs : ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் மீது ராணுவ அதிகாரி சரமாரியாக தாக்கி இருக்கிறார். இது தொடர்பாக வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது. லக்கேஜ் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், ராணுவ அதிகாரி விமான ஊழியர்களை தாக்கியது தெரியவந்துள்ளது.

லக்கேஜ் ஏன் அதிகமா இருக்கு? விமான ஊழியர்களை அட்டாக் செய்த ராணுவ அதிகாரி.. ஸ்ரீநகர் ஏர்போர்ட்டில் பரபரப்பு

ஊழியர்களை தாக்கிய ராணுவ அதிகாரி

Updated On: 

03 Aug 2025 19:02 PM

ஸ்ரீநகர், ஆகஸ்ட் 03 : ஸ்ரீநகர் விமான நிலையத்தில் (Srinagar Airport) லக்கேஷ் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் (Spicejet Staffs) மீது ராணுவ அதிகாரி (Army Officer) தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையம் எப்போது பரபரப்பாகவே காணப்படும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 3ஆம் தேதியான இன்று அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, டெல்லி செல்லும் விமானத்திற்காக பயணி ஒருவர் செக் இன் செய்தார். அந்த பயணி ராணுவ அதிகாரி கர்னல் சிங் என்று தெரியப்பட்டது. இவர் மொத்தம் 16 கிலோ எடையுள்ள பைகளை சுமந்து சென்றார்.

இது விமான நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட கிலோவை விட இரண்டு மடங்கு அதிகம். இது விமான பழதகாப்பு விதிமுறைகளின் கடுமையாக மீறலாகும். அதிக எடை வைத்திருப்பதால், அதற்கான கட்டணத்தை செலுத்த கோரி ராணுவ அதிகாரியிடம் (பயணி) ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் கூறி இருக்கின்றனர். ஆனால், ராணுவ அதிகாரி கட்டணத்தை செலுத்த மறுத்துள்ளார். அதோடு, ஸ்பேஸ்ஜெட் விமான ஊழியர்களிடம் வாக்குவாதம் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் நீடித்த நிலையில், ராணுவ அதிகாரி அங்கிருந்த ஸ்பைஸ்ஜெட் விமான ஊழியர்கள் நான்கு பேரை சரமாரியாக தாக்கி உள்ளார்.

Also Read : பரபரப்பு.. டெல்லி ஏர்போர்ட்டில் ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து.. பயணிகளுக்கு என்னாச்சு?

விமான ஊழியர்களை தாக்கிய ராணுவ அதிகாரி


அங்கிருந்த ஒரு தகடை எடுத்து, அவர்களை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, அங்கிருந்த அதிகாரிகள் வந்து ராணுவ அதிகாரி பிடித்து அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு முறையாக கடிதம் எழுதி, பயணி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது. அதோடு, விமானப் போக்குவரத்து விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட நபர் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கும் நடவடிக்கை விமான நிறுவனம் தொடங்கி உள்ளது.

Also Read : புறப்படும்போது ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்!

இதுகுறித்து விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் ஊழியர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. முதுகுத்தண்டு முறிவு, முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. சில ஊழியரின் வாய், மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. இந்த தாக்குதலில் நான்கு ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என தெரிவித்தது. இந்த சம்பவம் குறித்து பதிலளித்த ராணுவம், இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியது.

Related Stories
India vs England Test Series: கில் ரன் மழை முதல் சிராஜ் விக்கெட் வேட்டை வரை.. இந்தியா – இங்கிலாந்து தொடரில் குவிந்த ரெக்கார்ட் லிஸ்ட்!
Uttarakhand Floods: டேராடூன் முதல் ஹரித்வார் வரை புரட்டி எடுத்த மழை.. கிராமத்தை உருக்குலைத்த வெள்ளம்..!
கூடுதல் வரி விதிப்பேன் என மிரட்டிய டிரம்ப்.. விளக்கம் மூலம் பதிலடி கொடுத்த இந்தியா!
Air India : விமானத்தில் ஓடிய கரப்பான் பூச்சிகள்.. பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
கர்ப்பிணியின் கன்னத்தில் அறைந்த மருத்துவர் – குழந்தை மரணம்…. உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டு
Former Jharkhand CM Shibu Soren Death: ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் மறைவு.. பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் இரங்கல்!