வங்கியில் 59 கிலோ தங்கம்.. ரூ. 8 கோடி திருட்டு.. ராணுவ உடையில் வந்தவர்கள் கைவரிசை.. அதிர்ந்த கர்நாடகா!

Karnataka SBI Bank Theft : கர்நாடகாவில் உள்ள எஸ்பிஐ வங்கியில் 68 கிலோ தங்கம், ரூ.8 கோடி பணத்தை கொள்ளை கும்பல் திருடி சென்றுள்ளது. ராணுவ உடை அணிந்து வங்கிக்குள் சென்ற கும்பல், அங்குள்ள ஊழியர்களை கட்டிப்போட்டு, வங்கி மேலாளரை கத்திமுனையில் மிரட்டி, பணத்தை கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வங்கியில் 59 கிலோ தங்கம்.. ரூ. 8 கோடி திருட்டு.. ராணுவ உடையில் வந்தவர்கள் கைவரிசை.. அதிர்ந்த கர்நாடகா!

எஸ்பிஐ வங்கியில் கொள்ளை

Updated On: 

17 Sep 2025 16:35 PM

 IST

கர்நாடக, செப்டம்பர் 17 : கர்நாடக மாநிலத்தில் எஸ்பிஐ வங்கியில் (Karnataka SBI Bank Robbery) ஊழியர்களை கட்டிப்போட்டு வங்கியில் இருந்து 59 கிலோ தங்கம், ரூ.8 கோடி ரொக்கத்தையும் கொள்ளை கும்பல் எடுத்துச் சென்றது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கியில் புதிய கணக்கு திறப்பதற்காக வந்த அவர்கள், கத்தி மற்றும் துப்பாக்கிகளை காட்டி, வங்கி ஊழியர்களை மிரட்டி பணம், நகைகள் கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள சடசான் பகுதியில் எஸ்பிஐ வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியானது மகாராஷ்டி மாநிலத்தின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில், 2025 செப்டம்பர் 16ஆம் தேதியான நேற்று மாலை வங்கி ஊழியர்கள் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, வீட்டிற்கு புறப்பட தயாராக இருந்தனர்.

அப்போது, அங்க காரில வேகமாக வந்த முகமூடி அணிந்த கும்பல், உடனே வங்கிக்குள் புகுந்தனர்.  ராணுவ உடை அணிந்து, நாட்டுத் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது, இதனை அறிந்த வங்கி ஊழியர்கள் காவல் நிலையத்துக்கு அவசர எச்சரிக்கை அனுப்பும் பட்டனை அழுத்த முயன்றனர். அங்கு அவர்களை கத்தி முனையில் அந்த கும்பல் மிரட்டியுள்ளது. மேலும், சில வங்கி ஊழியர்களின் கை, கால்களை கட்டிப் போட்டனர். கழிவறையில் அவர்களை கட்டி வைத்து, பூட்டினர்.

Also Read : ஓரினச்சேர்க்கை செயலி.. பிளஸ் 1 மாணவனுக்கு 2 ஆண்டுகள் பாலியல் தொல்லை கொடுத்த 14 பேர்.. பகீர் சம்பவம்!

கர்நாடகாவை அதிரவைத்த கொள்ளை


வங்கி கிளை மேலாளரை மட்டும் மிரட்டி கருவூலம் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகு கருவூல லாக்கரை திறக்க சொல்லி கட்டாயப்படுத்திய கும்பல், திறக்கவில்லையென்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். வேறு வழியின்று வங்கி மேலாளரும் லாக்கரை திறந்ததும், கொள்ளையர்கள் தாங்கள் கொண்டு பையில் வங்கியில் இருந்த 59 கிலோ தங்க நகைகளையும், மேலும், ரூ.8 கோடி ரொக்க பணத்தையும் கொள்ளையடித்தனர். தங்க நகையின் மதிப்பு ரூ.20 கோடியாகும்.

நகை, பணத்தை எடுத்துக் கொண்டு, அவர்கள் அங்கிருந்த சென்றனர். இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கொள்ளையர்கள் விட்டுக் சென்ற தடயங்கள் எதுவும் உள்ளனவா என தடவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், வங்கி மேலாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Also Read : மும்பையில் பழுதாகி அந்தரத்தில் நின்ற மோனோ ரயில்.. சிக்கி தவித்த பயணிகள்!

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். அதில், கொள்ளை கும்பல், மராட்டிய மாநிலத்தில் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர்கள் போலி நம்பர் பிளேட் கொண்ட சுசுகி ஈவிஏ வாகனத்தைப் பயன்படுத்தி, கொள்ளையடித்த பிறகு மகாராஷ்டிராவில் உள்ள பந்தர்பூர் நோக்கிச் சென்றது தெரியவந்தது.