சுனாமி தாக்குதலை எதிர்கொள்ள புதிய முயற்சி…தயார் நிலையில் 100 கிராமங்கள்…எங்கு தெரியுமா!
100 Villages In Indian Ocean Region Prepared For Tsunami: இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி தாக்குதலை எதிர் கொள்வதற்கு தயார் நிலையில், 100 கிராமங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதில், மேலும் சில கிராமங்கள் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா விரைவில் 100- க்கும் மேற்பட்ட சுனாமி ஆபத்துக்கான தயார் நிலை கிராமங்களை அமைக்க உள்ளது. இந்த பிராந்தியத்தில் இவ்வளவு அதிகமான கிராமங்களை கொண்ட முதல் நாடாக இந்தியா உருவெடுக்கும். சுனாமி தயார் கிராமம் என்பது சுனாமி ஆபத்துக்கான தயார் நிலை மற்றும் வரைபடம், வெளியேற்ற வரைபடங்களில் பொதுக் காட்சி, 24 மணி நேர எச்சரிக்கை அமைப்புகள், முன்னெச்சரிக்கை பயிற்சிகளில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு உள்ளிட்டவற்றை இந்த கிராமம் பெற்றிருக்கும். இந்த கிராமங்களுக்கான சான்றிதழை யுனெஸ்கோவின் அரசுகளுக்கு இடையேயான கடல்சார் ஆணையம் வழங்குகிறது. சுனாமி தயார் என்பது ஒரு தன்னார்வ சமூக அடிப்படையிலான திட்டமாகும்.
சுனாமி தாக்குதலை சுலபமாக எதிர்கொள்ளலாம்
இது பொது மக்கள், சமூகத் தலைவர்கள், உள்ளூர் மற்றும் தேசிய அவசர நிலை மேலாண்மை நிறுவனங்களுடன் கூட்டாக பணி செய்வதன் மூலம் சுனாமி தாக்குதலை சுலபமாக எதிர் கொள்ளலாம். இந்தச் சான்றிதழ் பெற்ற 6 மாவட்டங்களில் தற்போது உள்ள 24 கடலோர கிராமங்களுடன் கூடுதலாக, 72 கிராமங்கள் இணைய உள்ளன.
மேலும் படிக்க: இன்று முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் கட்டணம்.. எத்தனை கி.மீக்கு எவ்வளவு ரூபாய் உயர்வு? முழு விவரம்..




9 கிராமங்களை இணைக்க கேரளா கோரிக்கை
அதன்படி, குஜராத், கேரளா, ஆந்திர பிரதேசம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் சில கிராமங்களை பட்டியலிட்டுள்ளன. 2026 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் கேரளா 9 கடலோர கிராமங்களை இணைக்க கோரிக்கை வைத்துள்ளது. இது ஒரு சமூகம் சார்ந்த முன் முயற்சி ஆகும்.
மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு கோரிக்கை
இது தொடர்பாக இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் நாயர் கூறுகையில், சுனாமி தயார் நிலை மட்டுமின்றி, புயல்கள் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களிலும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் மற்றும் பகுதிகளை அடையாளம் காண்பது மாநிலங்களும், யூனியன் பிரதேச அரசுகளும் முன் முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். உலக அளவில் நில நடுக்கங்களை கண்காணித்து, இந்திய பெருங்கடல் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கைகளை வழங்கும் இந்திய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தை செயல்படுத்துகிறது.
சோதனை அடிப்படையில் விரிவுபடுத்த நடவடிக்கை
இது யுனெஸ்கோ- ஐ. ஓ. சி சுனாமி ரெடி முயற்சியே செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு ஆகும். இந்த நிறுவனம் யுனெஸ்கோ- ஐ. ஓ. சி சுனாமி தயார் என்ற திட்டத்தை அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சோதனை அடிப்படையில் விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. விரைவில் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.
மேலும் படிக்க: தலைமைச் செயலாளர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு.. 3 நாள் மாநாட்டின் முக்கிய நோக்கம் என்ன?