AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: இறுக்கமான ஜீன்ஸ் அணியும் பெண்களாக நீங்கள்..? தொற்று, எரிச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கு!

Tight Jeans Dangers: இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் பெண்களுக்கு பல ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படலாம். காற்று சுழற்சி இல்லாததால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். தோல் அலர்ஜி, இரத்த ஓட்டக் குறைபாடு, இடுப்பு வலி, செரிமானப் பிரச்சனைகள் போன்றவையும் ஏற்படலாம். பருத்தி அல்லது தளர்வான ஜீன்ஸ் அணிவது, ஆடைகளை அடிக்கடி மாற்றுவது ஆகியவை பாதுகாப்பானவை.

Health Tips: இறுக்கமான ஜீன்ஸ் அணியும் பெண்களாக நீங்கள்..? தொற்று, எரிச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கு!
இறுக்கமான ஜீன்ஸ் அணிதல்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Jun 2025 16:45 PM IST

ஒவ்வொரு நாளும் இந்த நவீன உலகத்தில் உணவு முதல் உடை வரை பல விஷயங்கள் நடைமுறைக்கு வருகிறது. இதில் இறுக்கமான ஜீன்ஸ் (Tight Jeans) அணிவது இன்றைய இளம் பெண்கள் மத்தியில் ஸ்டைலின் அடையாளமாக மாறிவிட்டது. கல்லூரியாக இருந்தாலும் சரி, வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி. எங்கையாவது ஏதாவது ஒரு பெண் இறுக்கமான உடைகளை (Dress) அணிவதை பார்த்திருப்போம். ஒவ்வொரு பெண்ணும் ஆடை அணிவது அவரகளது சுதந்திரம் என்றாலும், இறுக்கமான ஆடை அணிவது உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா..? இறுக்கமான ஜீன்ஸ் அணிவது இளம் பெண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சில பிரச்சனைகளையும் தரும்.

இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் ஏற்படும் ஆபத்துகள்:

உடல் மேல் ஒரு துணி அணியும்போது காற்று சென்று வருவதற்கான சுழற்சி இருப்பது முக்கியம். ஜூன்ஸ் போன்ற உடைகள் காற்று சுழற்சி இல்லாதபோது, ​​பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளரும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இறுக்கமான ஜீன்ஸ் இந்த நிலைக்கு வழிவகுக்கிறது. இது பெண்களில் பிறப்புறுப்பு தொற்று அபாயத்தை அதிகரிக்கும்.

இந்த தொற்று பிரச்சனையானது அரிப்பு, எரிச்சல் மற்றும் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் தொற்று மிகவும் கடுமையானதாக மாறும். எனவே, இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும்போது உடனடியாக மருத்துவரை தொடர்புகொள்வது நல்லது.

இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் ஏற்படக்கூடிய பிற உடல்நலப் பிரச்சினைகள்:

தோல் ஒவ்வாமை மற்றும் தடிப்புகள்:

இறுக்கமான ஜீன்ஸ் சருமத்தில் உராய்வை அதிகரிக்கும். இது தடிப்புகள் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.

இரத்த ஓட்டம் குறைபாடு:

உடலின் கீழ் பகுதிக்கு இரத்த ஓட்டம் குறைந்து, கூச்ச உணர்வு மற்றும் உணர்வின்மை ஏற்படலாம்.

இடுப்பு தசைகளில் அழுத்தம்:

தொடர்ந்து இறுக்கமான ஆடைகளை அணிவதால் இடுப்புப் பகுதி நீட்சி ஏற்படுகிறது. இது வலி மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.

செரிமான பிரச்சனைகள்:

இறுக்கமான ஜீன்ஸ் வயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இது வாயு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இறுக்கமான ஜீன்ஸ் ஏன் தொற்றுநோயை ஏற்படுத்துகிறது?

இறுக்கமான ஜீன்ஸ் போன்ற உடைகள் அணியும்போது காற்று ஓட்டம் இல்லாததால், உடலில் ஏற்படும் வியர்வை வறண்டு போவதில்லை. அப்போது, ஈரப்பதமான இடங்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வேகமாக வளர தொடங்கும். ஜீன்ஸ் போன்ற கடினமான செயற்கைப் பொருள் பாக்டீரியாக்களை வெளியேற அனுமதிக்காது. இதனால், இவை வளர தொடங்கி தோல் பிரச்சனைகளை உண்டாக்க தொடங்கும்.

ஜீன்ஸூக்கு பதிலாக இவற்றை அணியலாம்..?

இறுக்கமான ஜீன்ஸுக்குப் பதிலாக பருத்தி அல்லது சற்று தளர்வான ஜீன்ஸ் அணிவது நல்லது. குறிப்பாக கோடையில், நீண்ட நேரம் இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம்.

இதுபோன்ற உடைகளை அணிய கட்டாயம் ஏற்பட்டால் உங்களுக்கு அதிகமாக வியர்த்தால் ஒரு நாளைக்கு ஒரு முறை உங்கள் ஆடைகளை மாற்றுவது நல்லது.  உள்ளாடைகள் எப்போதும் சுத்தமாகவும் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow Us