Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Healthy Lifestyle Tips: முடி முதல் செரிமான அமைப்பு வரை.. ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? தினமும் இதை செய்தால் போதும்!

Natural Health Remedies: அதிகமாக விரும்பப்படும் துரித மற்றும் ஆரோக்கியமற்ற உணவு, அதிக நேரம் செல்போன் மற்றும் லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்துதல், நல்ல தரமான தூக்கம் இல்லாமை போன்ற காரணங்களால் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதில் முடி உதிர்தல் முதல் முகப்பரு மற்றும் மோசமான செரிமான அமைப்பு வரை பல பிரச்சினைகள் அடங்கும்.

Healthy Lifestyle Tips: முடி முதல் செரிமான அமைப்பு வரை.. ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? தினமும் இதை செய்தால் போதும்!
ஆரோக்கியமான வாழ்க்கைImage Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Published: 09 Apr 2025 17:22 PM

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் பிஸியான மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக தங்கள் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துவது கிடையாது. அதிகமாக விரும்பப்படும் துரித மற்றும் ஆரோக்கியமற்ற உணவு (Healthy Food), அதிக நேரம் செல்போன் மற்றும் லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்துதல், நல்ல தரமான தூக்கம் (Sleeping) இல்லாமை போன்ற காரணங்களால் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதில் முடி உதிர்தல் முதல் முகப்பரு மற்றும் மோசமான செரிமான அமைப்பு வரை பல பிரச்சினைகள் அடங்கும். நீங்கள் இதே போன்ற சில பொதுவான உடல்நலப் பிரச்சினைகளை சந்தித்து வருகிறீர்கள் என்றால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த டிப்ஸை நீங்கள் பின்பற்றலாம்.

உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பான இந்த குறிப்புகள், உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து உங்களை சரிசெய்ய உதவி செய்யும். மேலும், இந்த உதவி குறிப்புகளை உங்கள் வாழ்நாள் முழுவதும் பின்பற்றி பலன் பெறலாம்.

தண்ணீர் குடித்தல்:

காலையில் தூங்கி எழுந்தவுடன் ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீரை தினந்தோறும் குடிப்பது நல்லது. இந்த வெதுவெதுப்பான நீர் உங்கள் உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. இந்த தண்ணீர் காலை வேளையில் உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவி செய்கிறது. மேலும், இவை பல உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து உங்களை பாதுகாத்துகொள்ள உதவி செய்யும்.

சோம்பு மற்றும் வெந்தயம்:

உங்களுக்கு கடந்த சில தினங்களாக தலைமுடி அதிகமாக உதிர்ந்தால், நீங்கள் உங்கள் சமையலறையில் எளிதாக கிடைக்கக்கூடிய சோம்பை தாராளமாக எடுத்து கொள்ளலாம். பெருஞ்சீரகம் என்று அழைக்கப்படும் சோம்பில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைய உள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க உதவும். இது உங்கள் முடி உதிர்தலைக் குறைக்கும். அதேபோல். இரவில் வெந்தயத்தை ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுஅது உங்கள் தலைமுடியின் பளபளப்பையும் அதிகரிக்கும். மேலும், வெந்தயம் உங்கள் முடி வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது.

தக்காளி:

கர்ப்ப காலத்தில் பெண்கள் தக்காளியை எடுத்துகொள்வது நல்லது. தக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் உள்ளது. இது தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. இது செரிமானத்தை சரியாக வைத்திருக்க வேலை செய்கிறது. மேலும், மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை நீக்க உதவி செய்கிறது.

பால் மற்றும் வாழைப்பழம்:

நீங்கள் விரைவாக உங்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்பினால், ஒரு நாளைக்கு இரண்டு முறை வாழைப்பழம் எடுத்துகொள்ளலாம். அதேபோல், வாழைப்பழத்தை பாலுடன் சாப்பிடுங்கள். இந்த உணவுகள் உங்கள் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க  உதவிசெய்யும். மேலும், இது உடலின் பலவீனத்தை நீக்கி, உங்களை தொடர்ந்து சுறுசுறுப்பாக வைக்கவும் உதவுகிறது.

செம்பு பாத்திர நீர்:

இரவில் செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்து கொள்ளுங்கள். இதற்குப் பிறகு, காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரைக் குடிக்கவும். இந்த செம்பு தண்ணீரானது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், இது மூட்டு வலியைக் குறைக்க உதவி செய்யும் என்று கூறப்படுகிறது. இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைக்கும். உடலில் தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது.

உப்பு:

மாலை முதல் இரவு நேரங்களில் அதிக உப்பு சார்ந்த உணவு பொருட்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மாலை நேரங்களில் அதிக உப்பு எடுத்துகொள்வது உடலில் நீர் தக்கவைப்பை அதிகரிக்கிறது. இதனால் எடை அதிகரிக்கும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

DCvSRH : ஹைதராபாத்தில் அதிரடியாக ஆடிய மழை - போட்டி ரத்து!
DCvSRH : ஹைதராபாத்தில் அதிரடியாக ஆடிய மழை - போட்டி ரத்து!...
முடி உதிர்தலுக்கான காரணம் என்ன ? இந்த அறிகுறிகள் இருக்கிறதா?
முடி உதிர்தலுக்கான காரணம் என்ன ? இந்த அறிகுறிகள் இருக்கிறதா?...
வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்ட 3 முக்கிய அம்சங்கள்!
வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்ட 3 முக்கிய அம்சங்கள்!...
இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை பார்த்திருக்கிறீர்களா?
இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை பார்த்திருக்கிறீர்களா?...
18 வருட ஐபிஎல்லில் இது முதல் முறை! புது சாதனை படைத்த கம்மின்ஸ்!
18 வருட ஐபிஎல்லில் இது முதல் முறை! புது சாதனை படைத்த கம்மின்ஸ்!...
எப்போதுமே சிம்புவின் பின்னால் நிற்பேன்- சந்தானம்!
எப்போதுமே சிம்புவின் பின்னால் நிற்பேன்- சந்தானம்!...
இப்படித்தான் தங்கத்தை டெலிவரி செய்வார்களா? கவனம் பெரும் வீடியோ!
இப்படித்தான் தங்கத்தை டெலிவரி செய்வார்களா? கவனம் பெரும் வீடியோ!...
கவுண்டமணியின் மனைவி மரணம் - நேரில் வந்து ஆறுதல் சொன்ன விஜய்
கவுண்டமணியின் மனைவி மரணம் - நேரில் வந்து ஆறுதல் சொன்ன விஜய்...
வீடியோவுக்காக பேன்டில் தீ பற்ற வைத்த நபர் - வைரலாகும் ஷாக் வீடியோ
வீடியோவுக்காக பேன்டில் தீ பற்ற வைத்த நபர் - வைரலாகும் ஷாக் வீடியோ...
ஈரோடு இரட்டைக்கொலை: மூன்று நாட்கள் கழித்து வெளியாகிய கொடூரம்!
ஈரோடு இரட்டைக்கொலை: மூன்று நாட்கள் கழித்து வெளியாகிய கொடூரம்!...
குழந்தையை போல் விளையாடும் புலி - வீடியோ வைரல்!
குழந்தையை போல் விளையாடும் புலி - வீடியோ வைரல்!...