Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Winter Health Tips: குளிர்காலத்தில் அடிக்கடி தொண்டை வலியா..? இந்த பொருட்கள் எளிதாக சரிசெய்யும்!

Winter Throat Pain: உணவு மற்றும் வாழ்க்கை முறையை சரிசெய்யாவிட்டால் சளி, இருமல், காய்ச்சல் முதல் மூட்டு வலி வரை பல பிரச்சனைகள் ஏற்படும். பல நேரங்களில் சளி வந்த பிறகு அல்லது சளி குணமடைந்த பிறகு தொண்டை வலி நீண்ட நாட்கள் நீடிக்கும். தொடர்ந்து, இது இருமல் மற்றும் மார்பு வலியை தரலாம்.

Winter Health Tips: குளிர்காலத்தில் அடிக்கடி தொண்டை வலியா..? இந்த பொருட்கள் எளிதாக சரிசெய்யும்!
தொண்டை வலிImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Dec 2025 15:47 PM IST

குளிர்காலம் (Winter) வந்தவுடன் குளிர்ச்சியுடன் பல பிரச்சனைகளும் உடலுக்கு வந்து சேரும். குளிர்காலத்தின்போது மாலை சீக்கிரம் முடிந்து இரவு வந்து, குளிர்ந்த காற்று போர்வைக்குள் நுழைந்து தூக்கத்தை இன்னும் இனிமையாக்கும். இந்த குளிர்கால பருவத்தின்போது, கொஞ்சம் கவனக்குறைவு பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். குளிர் காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) சற்று பலவீனமடைகிறது. எனவே, உணவு மற்றும் வாழ்க்கை முறையை சரிசெய்யாவிட்டால் சளி, இருமல், காய்ச்சல் முதல் மூட்டு வலி வரை பல பிரச்சனைகள் ஏற்படும். பல நேரங்களில் சளி வந்த பிறகு அல்லது சளி குணமடைந்த பிறகு தொண்டை வலி நீண்ட நாட்கள் நீடிக்கும். தொடர்ந்து, இது இருமல் மற்றும் மார்பு வலியை தரலாம். அதன்படி, உங்கள் வீட்டில் இருக்கும் சில இயற்கை பொருட்கள் தொண்டை வலி பிரச்சனையை மட்டும் போக்காமல் இருமல் மற்றும் சளியையும் குறைக்கும்.

ALSO READ: குளிர்காலத்தில் ஒரு கிளாஸ் ஹாட் வாட்டர்.. குவியும் ஆரோக்கிய நன்மைகள்..!

பூண்டு நிவாரணம்:

சளி இருக்கும்போது ஏற்படும்போது தொண்டை புண், சளி மற்றும் இருமல் போன்றவற்றைப் போக்கவும் பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன்படி, இதை நசுக்கி வெண்ணெய் அல்லது தேனுடன் சேர்த்து சாப்பிடலாம். இது சிறிது நேரத்தில் உங்கள் தொண்டை வலியை ஏற்படுத்தும். அப்படி இல்லையென்றால், உங்கள் டீயில் பூண்டைச் சேர்த்து குடிக்கலாம்.

பூண்டு உதவும்:

உங்களுக்கு மேலே குறிப்பிட்டபடி செய்ய விருப்பம் இல்லையெனில் தொண்டை வலியைப் போக்க, பச்சை பூண்டு மற்றும் சிறிது உப்பு சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி, ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை வாய் கொப்பளிக்கவும். இது தொண்டை வலியைக் குறைப்பதோடு, மார்பு அசௌகரியத்தை குறைக்கும்.

துளசி சாறு:

ஆன்மிக ரீதியாக பயன்படுத்தப்படும் துளசி செடி பலரது வீட்டிலேயே எளிதாக கிடைக்கும். இதன் காரணமாக தொண்டைப் பிரச்சினைகளை சரிசெய்ய துளசிச் சாற்றைப் பயன்படுத்தலாம். இது சளி மற்றும் இருமலில் இருந்தும் நிறைய நிவாரணம் அளிக்கிறது.

ALSO READ: ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் வெந்தய நீர்.. யார் யார் தவிர்ப்பது நல்லது..?

இஞ்சி அல்லது ட்ரை இஞ்சி:

குளிர்காலத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் டீ தயாரிக்க இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்கு உடனடியாக இஞ்சி கிடைக்கவில்லை என்றால், உலர்ந்த இஞ்சியையும் பயன்படுத்தலாம். உங்களுக்கு தொண்டை வலி இருந்தால், ஒரு சிறிய துண்டு ட்ரை இஞ்சியை உங்கள் பற்களின் கீழ் அழுத்தினால், சாறு மெதுவாக உங்கள் தொண்டையை அடையும். இது விரைவில் நிவாரணத்தை தரும். கூடுதலாக, ட்ரை இஞ்சிப் பொடியை தேனுடன் கலந்து நக்குவதும் நிவாரணம் அளிக்கும். உங்களுக்கு விருப்பம் எனில் இஞ்சி சாற்றை தேனுடன் கலந்தும் எடுத்து கொள்ளலாம்.