அதிகமாக வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? மருத்துவர்கள் எச்சரிக்கை
Hidden Risk in Peanuts : வேர்க்கடலையில் புரதம் முதல் ஆரோக்கியமான கொழுப்புகள் வரை பல நன்மைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கான காரணம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
 
                                வேர்க்கடலை (Peanut) நம் அனைவருக்கும் பிடித்தமான உணவு. அவற்றில் புரதம் (Protein), ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. அசைவ உணவு எடுத்துக்கொள்ளாத நபர்கள், புரத தேவைக்காக வேர்க்கடலை சாப்பிட அறிவுறுத்துகின்றனர். பாதாம், வால்நட், முந்திரி போன்ற பிற பருப்பு வகைகளை ஒப்பிடும்போது இதன் விலை மிகவும் குறைவு. அதே நேரம் அதற்கு நிகரான சத்துக்களையும் வேர்க்கடலை கொண்டுள்ளது. குறைந்த விலையில் அதிக ஆற்றலை வழங்கும் இந்த வேர்கடலைகள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அவற்றை அதிக அளவில் சாப்பிட்டால் ஆபத்தானது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதுகுறத்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
அதிகமாக வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள்
- அஃப்லாடாக்சின்’ எனப்படும் தீங்கு விளைவிக்கும் பூஞ்சை முறையற்ற முறையில் சேமிக்கப்பட்ட, ஈரமான அல்லது பழைய வேர்க்கடலையில் வளரும். இது கல்லீரலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், கல்லீரல் புற்றுநோய்க்கும் வழிவகுக்கிறது. அதனால்தான், பழையவற்றை விட, புதிய, உலர்ந்த வேர்க்கடலையை மட்டுமே சாப்பிட வேண்டும்.
- வேர்க்கடலையில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் அதிகம். அவை இதயத்திற்கு நல்லது என்றாலும், அவற்றை அதிக அளவில் சாப்பிடுவது உடலில் அதிகப்படியான கலோரிகளுக்கும் விரைவான எடை அதிகரிப்பிற்கும் வழிவகுக்கும். எனவே டயட்டை கடைபிடிப்பவர்கள் இது குறித்து கவனமாக இருக்க வேண்டும்.
இதையும் படிக்க : நீங்க தினமும் முந்திரி சாப்பிடுறீங்களா? அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
- வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். இது செரிமானத்திற்கு நல்லது என்றாலும், அதிகமாக சாப்பிடுவது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தி செரிமான பிரச்சினைகள் வாயு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
- சிலருக்கு வேர்க்கடலை ஒவ்வாமை இருக்கும். அதையும் மீறி அவர்கள் வேர்க்கடையை எடுத்துக்கொண்டால், தோல் வெடிப்புகள், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தொண்டை வீக்கம் போன்ற கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தும். இது ஆபத்தானது என்பதால், ஒவ்வாமை உள்ளவர்கள் இதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
- வேர்க்கடலையில் உள்ள பாஸ்பரஸ் உடலில் துத்தநாகம், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சக் கூடும். இது உடலில் ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும்.
இதையும் படிக்க : சாப்பிட்ட உடனே ஏலக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..? அப்படி என்ன செய்யும்..? விரிவான பார்வை!
உங்கள் உடல் நலத்திற்கு வேர்க்கடலை சாப்பிட விரும்பினால், ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி அளவு (சுமார் 30 கிராம்) மட்டுமே உட்கொள்வது நல்லது. அவற்றை எப்போதும் உலர்ந்த, குளிர்ந்த இடத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும். குறிப்பாக, உங்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். நமது உணவுப் பழக்கத்தில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் நமது ஆரோக்கியத்தைப் பராமரிக்க முடியும்.
 
                         
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                    