Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: சாப்பிட்ட உடனே ஏலக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..? அப்படி என்ன செய்யும்..? விரிவான பார்வை!

Cardamom After Eating: சாப்பிட்ட பின் ஏலக்காய் மெல்லுவது செரிமானத்தை மேம்படுத்தவும், வாயு, அஜீரணம், அமிலத்தன்மையைக் குறைக்கவும் உதவும். ஏலக்காயில் உள்ள நொதிகள் உணவை விரைவாக ஜீரணிக்க உதவுகின்றன. மேலும், இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைக்கின்றன. இது சுவாசத்தை புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கும்.

Health Tips: சாப்பிட்ட உடனே ஏலக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..? அப்படி என்ன செய்யும்..? விரிவான பார்வை!
ஏலக்காய்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Jul 2025 14:56 PM

உணவை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது சிலர் ஏலக்காயை (Cardamom) சாப்பிடுவதை நாம் பார்த்திருப்போம். பெரும்பாலான உணவுகளில் பில் கட்டும் இடங்களில் சீரகம் மற்றும் ஏலக்காய் ஒரு சிறிய கிண்ணத்தில் நாம் வைத்து பாத்திருப்போம். பொதுவாகவே, ஏலக்காய் சாப்பிடுவது செரிமானத்திற்கு சிறந்தது என்று நம்பப்படுகிறது. அதேபோல், சாப்பிட்டவுடன் தினமும் 2 ஏலக்காய்களை சாப்பிடுவது உங்களுக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை (Health Benefits) தரும். இது உங்கள் உணவில் ஒரு சிறிய ஆனால் முக்கியமான பகுதியாக அமைகிறது. அதன்படி உணவுக்குப் பிறகு ஏலக்காயை மெல்லுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அது உங்களுக்கு ஏன் நன்மை பயக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.

ஏலக்காயின் நன்மைகள்:

பச்சை ஏலக்காயை தினமும் சாப்பிடுவது உங்களை பல வழிகளில் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஏலக்காயை சாப்பிடுவது சுவாசத்தை புத்துணர்ச்சியாக வைப்பது மட்டுமின்றி, சமைக்க பயன்படுத்தும்போது உணவை சுவையாகவும் மாற்றுகிறது. இதனை எடுத்துகொள்ளும்போது செரிமானத்திற்கும் பெரிதும் உதவியாக இருக்கிறது. அதன்படி, ஏலக்காயை தவிர, ஏலக்காய் விதைகள், எண்ணெய் மற்றும் சாறு ஆகியவற்றில் உள்ள பண்புகள் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன.

ALSO READ: தினமும் கிரீன் டீ குடிப்பதால் 2 வாரங்களில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் – ஆச்சரிய தகவல்

இரவில் தூங்குவதற்கு முன் ஏலக்காயை மென்று சாப்பிட்டால், அது உங்கள் செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. இதனால், உங்களுக்கு ஏற்படும் வாயு, அஜீரணம் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையைக் குறைக்கும். அவ்வபோது எடுத்துகொள்ளும்போது உணவை விரைவாக ஜீரணிக்கவும் உதவி செய்கிறது. அதாவது, ஏலக்காயில் உணவை ஜீரணிக்கும் நொதிகள் உள்ளன. இவை உணவை மிகவும் திறமையாகவும், வேகமாகவும் உடைக்க உதவுகின்றன.

ஏலக்காய் பாரம்பரியமாக செரிமானத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதில் இரைப்பை சாறுகள் மற்றும் நொதிகளின் சுரப்பைத் தூண்டும் சேர்மங்கள் உள்ளன. இது உணவு செரிமானத்தை எளிதாக்குகிறது. இது வீக்கம், வாயு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சினைகளைப் போக்க உதவும்.

ஏலக்காய் இயற்கையான நறுமணப் பண்புகளைக் கொண்டுள்ளது. இதை மென்று சாப்பிடுவது வாய் துர்நாற்றத்தை நீக்கி, சுவாசத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இதில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் குறைக்கவும் உதவுகின்றன. மேலும், ஏலக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இது செரிமான அமைப்பில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவியாக இருக்கும். சிலர் குமட்டல் மற்றும் வாந்தியைக் குறைக்கவும் ஏலக்காயைப் பயன்படுத்துகின்றனர்.

ALSO READ: சாப்பிட்டவுடன் சிறிது நேரம் நடப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் – ஆச்சரிய தகவல்

சாப்பிட்ட பிறகு ஏலக்காயை மென்று சாப்பிடுவது ஒரு இனிமையான உணர்வைத் தருகிறது. இது உணவை நன்றாக செரிமானம் செய்ய உதவுவது மட்டுமின்றி, மனதிற்கு அமைதியை அளிக்கிறது. அடுத்த முறை சாப்பிட்ட பிறகு மவுத் ஃப்ரெஷ்னர் எடுக்க நினைக்கும் போது, நிச்சயமாக ஏலக்காயைச் சேர்க்கவும். இது உங்கள் வாயைப் புத்துணர்ச்சியடையச் செய்வது மட்டுமல்லாமல், உங்கள் செரிமான அமைப்புக்கும் பயனளிக்கும்.