Health Tips: இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்து.. இந்த 7 உணவுகளை ஏன் தவிர்ப்பது நல்லது?

Heart Health: கடந்த 2022ம் ஆண்டில் சுமார் 19.8 மில்லியன் மக்கள் இதயம் தொடர்பான நோய்களால் உயிரிழந்துள்ளனர். தமனிகள் படிப்படியாக அடைக்கப்பட்டு, இரத்த ஓட்டத்தை (Blood Flow) கட்டுப்படுத்தும்போது ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, நமது அன்றாட உணவுப் பழக்கங்களில் ஏற்படும் தவறுகள் இந்த அடைப்பை துரிதப்படுத்துகின்றன.

Health Tips: இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்து.. இந்த 7 உணவுகளை ஏன் தவிர்ப்பது நல்லது?

இதய ஆரோக்கியம்

Published: 

08 Dec 2025 17:05 PM

 IST

உலகளவில் அதிகளவிலான மரணத்திற்கு இதய நோய் (Heart Disease) முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை தவிர்க்க வேண்டுமெனில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது முக்கியம். கடந்த 2022ம் ஆண்டில் சுமார் 19.8 மில்லியன் மக்கள் இதயம் தொடர்பான நோய்களால் உயிரிழந்துள்ளனர். தமனிகள் படிப்படியாக அடைக்கப்பட்டு, இரத்த ஓட்டத்தை (Blood Flow) கட்டுப்படுத்தும்போது ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, நமது அன்றாட உணவுப் பழக்கங்களில் ஏற்படும் தவறுகள் இந்த அடைப்பை துரிதப்படுத்துகின்றன. எனவே, இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தான 7 உணவுகள் எவை என்பதை இன்று உங்களுக்குச் சொல்வோம்.

ALSO READ: ஊறுகாய் இல்லாமல் உணவு சாப்பிட பிடிக்காதா? இதன் பக்கவிளைவு இவ்வளவு இருக்கு!

ரெட் மீட்:

அசைவ உணவு உண்பவர்கள் மட்டன் மற்றும் ரெட் மீட் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால், இதய ஆரோக்கியத்திற்கு இவற்றை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. ரெட் மீட்டில் உள்ள அதிக கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு மிகவும் தீங்கு விளைவிக்கும். இந்த அசைவ உணவுகளை தினமும் சிறிய அளவில் உட்கொள்வது கூட கொழுப்பை அதிகரிக்கும், தமனிகளை கடினமாக்கும் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். அதன்படி, ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க விரும்பினால், ரெட் மீட் உள்ளிட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்க்கவும்.

குக்கீஸ், கேக்குகள்:

பெரும்பாலான நேரங்களில் மக்கள் கொண்டாட்டங்களுக்காக கேக் ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். இருப்பினும், கேக்குகள் மற்றும் பேக்கரி உணவுகளிதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இந்த பேக்கரி பொருட்களில் தோராயமாக 60 சதவீதம் கொழுப்பு உள்ளது. இது இதயத்தின் தமனிகளில் குவிந்து இதய செயல்பாட்டை மோசமாக்கும்.

முட்டையின் மஞ்சள் கரு:

நீங்கள் 40 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதை தவிர்க்கவும். இவற்றில் அதிக அளவு கொழுப்பு உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள கொழுப்பை ஆற்றலாக மாற்ற முடியாமல், உங்கள் தமனிகளில் படிந்து, இதய அடைப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். அதன்படி, முட்டையின் மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது.

அதிக சோடியம் உள்ள உணவுகள்:

உடனடி நூடுல்ஸ், பாக்கெட் சூப்கள், ஊறுகாய், சிப்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என அனைத்திலும் அதிக அளவு சோடியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, தமனி சுவர்களை சேதப்படுத்துகிறது. பிளேக் உருவாவதை சேதப்படுத்துகிறது. இதன் காரணமாக, ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க, அதிக சோடியம் கொண்ட இது மாதிரியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

வறுத்த உணவுகள்:

வறுத்த உணவுகளும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுகிறது. பக்கோடாக்கள், சமோசாக்கள், பரோட்டா, பிரஞ்சு ப்ரைஸ் மற்றும் ப்ரைடு சிக்கன் போன்ற வறுத்த உணவுகளில் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் மீண்டும் சூடாக்கப்பட்ட எண்ணெய் உள்ளன. இவை LDL ஐ அதிகரிக்கின்றன. அதாவது, இந்த கொழுப்புகள் தமனிகளை அடைத்து இதயத்தில் பிரச்சனையை உண்டாக்குகிறது.

ALSO READ: ஆஹா! ஆரஞ்சு தோலில் இவ்வளவு நன்மைகளா? தூக்கி மட்டும் போடாதீங்க!

பால் பொருட்கள்:

அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள், முழு கொழுப்புள்ள கிரீம், பால், தயிர் மற்றும் நெய் போன்றவற்றை தவிர்க்கவும். உங்கள் வாழ்க்கை முறையில் குறைந்த உடல் செயல்பாடுகள் உள்ளவர்களாக இருந்தால் (உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவை இல்லாமை) இவற்றை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும், இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

பானங்கள்:

டயட் சோடா வளர்சிதை மாற்றத்தை சீர்குலைத்து, பசியை அதிகரிக்கும். எனர்ஜி பானங்கள் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும், இது காலப்போக்கில் இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை