நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய 5 பழங்கள் – காரணம் என்ன தெரியுமா?

Diabetes Diet Warning: நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். குறிப்பாக அவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய 5 பழங்கள் பற்றியும் அதற்கான காரணம் பற்றியும் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய 5 பழங்கள் - காரணம் என்ன தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Published: 

20 Aug 2025 23:17 PM

மாறிவரும் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இளம் வயதிலேயே பலரும் நீரிழிவு நோயால் (Diabetic) பாதிக்கப்படுகின்றனர்.  போதிய உடற்பயிற்சி இல்லாதது, நார்சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது ஆகியவை நீரிழிவு நோய்க்கு மூல காரணங்கள். நீரிழிவு நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளில் அதிகம் கவனம் தேவைப்படும். உதாரணமாக  பழங்கள் (Fruit) ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் சில பழங்களில் அதிக சர்க்கரை உள்ளது. அத்தகைய பழங்களை சாப்பிடுவது இன்சுலின் அளவை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதனால் உயிருக்கே ஆபத்தாக கூட முடியலாம்.  அதனால்தான் நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய  ஐந்து பழங்கள் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய 5 பழங்கள்

1. மாம்பழத்தில் இயற்கையாகவே அதிக சர்க்கரை உள்ளது. ஒரு மாம்பழத்தில் சுமார் 40 முதல் 45 கிராம் சர்க்கரை உள்ளது. அதன் கிளைசெமிக் குறியீடு (GI) 51 முதல் 60 வரை இருக்கும். அதாவது அதை சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும். இதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினம்.

இதையும் படிக்க : வலி நிவாரணிகளால் ஏற்படும் சிறுநீரக பாதிப்புகள்.. இவற்றை சரியாக எப்படி கையாள்வது..?

2. வாழைப்பழம் பழுக்கும்போது, அதன் ஸ்டார்ச் சர்க்கரையாக மாறும். நன்கு பழுத்த வாழைப்பழத்தின் கிளைசெமிக் குறியீடு மதிப்பு 60 க்கும் அதிகமாக உள்ளது. இதனால் இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கும்.

3. சப்போட்டா இனிப்பாக இருப்பதற்குக் காரணம், அதில் அதிக சர்க்கரை  இருப்பது முக்கிய காரணமாகும். 100 கிராம் சப்போட்டாவில் சுமார் 20 கிராம் சர்க்கரை உள்ளது. இதன் கிளைசெமிக் குறியீடு 65 முதல் 70 வரை இருக்கும். இது நீரிழிவு நோயாளிகளின் இரத்த குளுக்கோஸ் அளவை விரைவாக அதிகரிக்கிறது.

4.திராட்சையிலும் சர்க்கரை அளவு நினைப்பதை விட அதிகமாக இருக்கும். உதாரணமாக 100 கிராம் திராட்சையில் சுமார் 16 முதல் 18 கிராம் சர்க்கரை உள்ளது. இதன் கிளைசெமிக் குறியீடு அளவு 50 முதல் 59 வரை இருக்கும். திராட்சையின் தோல் மெல்லியதாக இருப்பதால், நார்ச்சத்து மிகக் குறைவு. அதனால்தான் சிறிது சாப்பிட்டாலும் இரத்த குளுக்கோஸ் அளவு விரைவாக அதிகரிக்கும்.

இதையும் படிக்க : இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் இயற்கை உணவுகள் – அவற்றின் நன்மைகள் என்ன?

5. அன்னாசி பழத்தில் சர்க்கரை மிக அதிகமாக உள்ளது. இதன் கிளைசெமிக் குறியீடு 66 முதல் 94 வரை இருக்கும். உணவுக்குப் பிறகு இதை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கும். அதனால்தான் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பழத்தை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.