முதல் பாகத்தை விட ஜெயிலர் 2 படம் மாபெரும் வெற்றியைப் பெறும் – நடிகர் யோகி பாபு

Yogi Babu Talks About Jailer 2 Movie Update: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படம் எப்படி இருக்கும் என்று நடிகர் யோகி பாபு பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முதல் பாகத்தை விட ஜெயிலர் 2 படம் மாபெரும் வெற்றியைப் பெறும் - நடிகர் யோகி பாபு

ஜெயிலர் 2

Published: 

25 Apr 2026 16:58 PM

 IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாகவும் அவ்வபோது நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு. இவர் காமெடி நடகராக மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல நாயகனாக நடித்தப் போதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நாயகனாக நடித்தப் பிற்கும் தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களில் நடிப்பதை கைவிடவில்லை. இவர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து பல நூறு படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

அந்த வகையில் நடிகர் யோகி பாபு சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அதில் தனது நடிப்பில் உருவாகும் படங்கள் குறித்த அப்டேட்டை வெளிப்படையாக பேசினார். அதன்படி ஜெயிலர் 2 படத்தினை குறித்து அவர் பேசியதும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முதல் பாகத்தை விட ஜெயிலர் 2 படம் மாபெரும் வெற்றியைப் பெறும்:

நடிகர் யோகி பாபு ஜெயிலர் படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இவருக்கும் ரஜினிகாந்திற்கும் இடையே உள்ள காமெடி சீன்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் யோகி பாபு பேசியதாவது, ஜெயிலர் படம் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் ஜெயிலர் 2 படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று யோகி பாபு தெரிவித்துள்ளார். மேலும் நெல்சன் இந்தப் படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இது முதல் பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாக இருக்கப்போகிறது என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… கோயம்புத்தூர் மக்களே ரெடியா? கர படக்குழு சொன்ன குட் நியூஸ்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இன்று மாலை வெளியாகிறது இரண்டு வானம் படத்தின் முதல் சிங்கிள்

Follow Us
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்