இயக்குநர் வெங்கி அட்லூரி கதை சொல்லும் போது இதனை மிஸ் செய்ய கூடாது என்று நினைத்தேன் – மமிதா பைஜூ
Mamitha Baiju Talks About Vishwanath & Sons Movie: மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் மமிதா பைஜூ தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகை மமிதா பைஜூ விஸ்வநாத் & சன்ஸ் என்ற படத்தில் நடித்து உள்ளார்.

சூர்யா - மமிதா பைஜூ
மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மமிதா பைஜூ. இவர் மலையாள சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து நாயகிகளின் தோழியாக நடித்து வந்த மமிதா பைஜூ பிறகு மலையாள சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். அதன் பிறகு இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. பிறகு மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் படங்களில் நடிக்க அதிக அளவில் ஒப்பந்தம் ஆனார். மேலும் இதுவரை தமிழ் சினிமாவில் மட்டும் 5 படங்களில் நடித்துள்ளார்.
அதில் ஒரு படமான டியூட் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் அடுத்தடுத்து 4 படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாக காத்திருக்கின்றது. அதில் குறிப்பாக தமிழ் சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை மமிதா பைஜூ நடிகர் சூர்யா உடன் இணைந்து நடித்து உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை மிஸ் செய்யக்கூடாது என்று நினைத்தேன்:
இந்த நிலையில் நடிகை மமிதா பைஜூ சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் நடித்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், நான் அந்தக் கதையைக் கேட்டபோது, அது எனக்குப் புதுமையாகத் தோன்றியது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெங்கி சார் என்னை அழைத்து, கதையின் சுருக்கத்தை விவரித்தார். அந்த இடத்திலேயே, அந்தத் தருணத்திலேயே அது எனக்கு மிகவும் பிடித்துப்போனது. ‘அடடா! இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறதே… இதை நான் தவறவிடவே கூடாது,’ என்று நான் நினைத்துக்கொண்டேன் என்றும் நடிகை மமிதா பைஜூ தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Yash: கேஜிஎஃப் பார்ட் 3 உருவாகுமா? ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன யாஷ்!
இணையத்தில் வைரலாகும் நடிகை மமிதா பைஜூ பேச்சு:
#MamithBaiju about #VishwanathAndSons :
“When I heard the story, it felt fresh. I liked it a lot. Venky sir called me and gave me a brief.. I loved it right then and there.. I was like, ‘My God, I’m getting a chance to play a character like this.. I shouldn’t miss it..”🤝💥
— Laxmi Kanth (@iammoviebuff007) April 22, 2026
Also Read… Thalaivar 173: ரஜினிகாந்த் – சிபி சக்ரவர்த்தி கூட்டணி கைவிடப்பட இதுதான் காரணமா?