பிக் பாஸ் வீட்டை விட்டு இந்தவாரம் வெளியேறும் நபர் இவர்தான்? இணையத்தில் வைரலாகும் தகவல்!

Bigg Boss Season 9 Update: தமிழ் சின்னத்திரையில் கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கிய நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 9 தமிழ். இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமாகி 6 வாரத்தை கடந்த நிலையில், வார இறுதியான இன்று இந்த பிக்பாஸ் வீட்டைவிட்டு யார் வெளியேறுகிறார் என்பது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் வீட்டை விட்டு இந்தவாரம் வெளியேறும் நபர் இவர்தான்? இணையத்தில் வைரலாகும் தகவல்!

பிக் பாஸ்

Published: 

16 Nov 2025 11:49 AM

 IST

உலகநாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan)ஆரம்பத்தில் தமிழில் தொகுத்துவந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ் தமிழ் (Bigg Boss Tamil). இந்த நிகழ்ச்சியை கடந்த 2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுவரையிலான சீசன்களை இவர்தான் தொகுத்துவந்தார். பின் இவர் அரசியல் போன்ற சமூக பொறுப்புகளை இந்தநிலையில், அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பின் கடந்த பிக்பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி முதல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவருகிறார். அந்த வகையில் தற்போது பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil) நிகழ்ச்சியானது தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கிய நிலையில், தற்போது வரை சுமார் 42 நாட்களை கடந்துள்ளது. இந்த போட்டியானது 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், முதல் 3 வாரத்தில் 4 நபர்கள் வெளியேறியிருந்தனர். அதை தொடர்ந்து வைல்ட் கார்ட் எண்டரி போட்டியாளர்கள் 4 பேர் உள் நுழைந்தனர்.

இதை தொடந்து ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 6 வாரமான நிலையில்,  இந்த வாரத்தில் எந்த போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. அதன்படி இந்த நிகழ்ச்சியில் இருந்து வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் (Watermelon Star Diwakar) வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கனி திருவும் (Kani Thiru) இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதை இன்றய எபிசோட் வெளியானதாக உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குப்பை தொட்டியில் என்ன இருக்குனு ஆராய்ச்சி பண்றங்க… ரெட் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி!

பிக்பாஸ் சீசன் 9 தமிழ் 42வது நாளின் முதல் ப்ரோமோ :

இந்த ப்ரோமோவில் நடிகர் விஜய் சேதுபதி, வாட்டர்மெலான் திவாகரை கேள்விகள் கேட்பது போல இருக்கிறது. அதில் விஜய் சேதுபத்தில், வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் டாஸ்குகளில் சரியாக விளையாடாதது குறித்தும், எந்தவித அனுமதியும் இல்லாமல் அதிலிருந்து ஏன் வெளியேறினீர்கள் என கேள்விகளை கேட்டிருந்தார். மேலும் அவர் கேமராவின் முன் செய்த ரீல்ஸ் மற்றும் அதன் தொடர்பாக அவர் டாஸ்குகளில் சரியாக விளையாடாதது குறித்தும் சரமாரியாக கேள்விகளை கேட்டிருந்தார்.

இதையும் படிங்க: விமர்சனங்கள் வந்துகொண்டுதான் இருக்கும் – உருவகேலி குறித்து மனம்திறந்த கயாடு லோஹர்!

தொடர்ந்த பேசிய விஜய் சேதுபதி அந்த மேடையிலே அமர்ந்துவிட்டார். இது தொடர்பான இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இந்த சீசன் 9 மற்ற சீசன்களை ஒப்பிடும்போது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது என்றே கூறலாம். இதுவரை 6 வாரங்கள் கடந்த நிலையில், இன்னும் 8 வரத்திற்கும் மேல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.