நாகார்ஜுனா சார் ஏன் வயதாகாமல் இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை – விஜய் சேதுபதி

Actor Vijay Sethupathy talks about Nagarjuna: தென்னிந்திய சினிமாவில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகின்றது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி இந்தியா முழுவதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தென்னிந்திய மொழிகளில் தொகுப்பாளர்கள் இணைது ஒரே மேடையில் பேசியது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

நாகார்ஜுனா சார் ஏன் வயதாகாமல் இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை - விஜய் சேதுபதி

மோகன்லால், நாகர்ஜூனா, விஜய் சேதுபதி

Published: 

10 Dec 2025 15:37 PM

 IST

வெளிநாடுகளில் பிக் பிரதர் என்ற நிகழ்ச்சி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்த நிகழ்ச்சி மக்களிடையே வரவேற்பைப் பெறுவதைத் தொடர்ந்து இந்திய சினிமாவில் முதன்முறையாக இந்தியில் பிக்பாஸ் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு காரணம் பொதுவாகவே நமது மக்களிடையே அடுத்தவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்கு ஆர்வம் அதிகாம இருக்கும். அப்படி இருக்கும் மக்களுக்கு அவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக இந்த நிகழ்ச்சி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு பெரிய வீட்டில் பலதரப்பட்ட மனநிலை உடைய நபர்களை குறிப்பிட்ட நாட்கள் ஒன்றாக தங்க வைக்கப்படுவார்கள். அவர்கள் வெளியுலக தொடர்பே இல்லாமல் ஒரே வீட்டில் இருக்கும் போது அவர்கள் மனநிலை எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை படம்பிடித்து ஒளிபரப்புவார்கள்.

இதன் காரணமாகவே இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தி மொழியில் வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்ச்சி தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியின் ஓடிடி உரிமையை பிரபல ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் சார்பில் சமீபத்தில் சென்னையில் ஒரு விழா நடத்தப்பட்ட்டது. அதில் தென்னிந்திய மொழிகளின் தொகுப்பாளர்களான விஜய் சேதுபதி, நாகர்ஜுனா மற்றும் மோகன்லால் ஆகியோர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து மோகன்லால் சமீபத்தில் தாதாசாகேப் விருதை பெற்றதற்காக அவர் கௌரவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேடையில் நடிகர் விஜய் சேதுபதி பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

நாகார்ஜுனா ஏன் வயதாகாமல் இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை:

அதில் விஜய் சேதுபதி பேசியதாவது, நாகார்ஜுனா சார் ஏன் வயதாகாமல் இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவரை வைத்து வயதானதைத் தடுக்க ஆராய்ச்சி செய்ய வேண்டும். அவரது தலைமுடியிலிருந்து கூட, அவர் மிகவும் அழகாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார். என் பேரக்குழந்தைகள் கூட வந்தாலும் அவர் அப்படித்தான் இருப்பார் என்று புகழ்ந்து பேசியிருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… இது நம்ம லிஸ்டிலேயே இல்லையேனு 2025-ம் ஆண்டில் ஹிட் அடித்தப் படங்களின் லிஸ்ட் இதோ!

இணையத்தில் கவனம் பெறும் விஜய் சேதுபதியின் பேச்சு:

Also Read… இந்தி சினிமாவில் வெளியான ஜாரா ஹாட்கே ஜாரா பாச்கே படத்தை மிஸ் செய்யாதீர்கள்

சிக்கலில் இண்டிகோ விமான சேவை.. எனினும் டிக்கெட் விற்பனையாவது எப்படி?
திருமணமான அடுத்த 4வது நாளில் படப்பிடிப்பில் சமந்தா
5 வயது சிறுவனை தாக்க முயற்சித்த சிறுத்தை.. சாதுரியமாக செயல்பட்டதால் தப்பிய சம்பவம்..
அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?